
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பரில் இலங்கை கொழும்பில் நடைபெறும் என்பதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறான உறுதிமொழி எதனையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்படுமானால் அதனை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர்...