பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பரில் இலங்கை கொழும்பில் நடைபெறும் என்பதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறான உறுதிமொழி எதனையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்படுமானால் அதனை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு’வால் வெளியிடப்படும்.
இந்தநிலையில் கமலேஸ் சர்மா தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று மாத்திரமே உகு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதை பொதுநலவாய அமைப்பு செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகமவை கோடிட்டு நேற்று உள்ளுர் ஊடகங்களில், பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடக்கும் என்பதை கமலேஸ் உறுதிப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் இது பிழையான செய்தி என்று குறிப்பிட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு, இலங்கையில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சர்மா, தமது பயணத்தை நாளை 13ம் திகதி முடித்துக்கொண்ட பின்னர், தமது அமைப்பினால் நிலைப்பாட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
பொதுநலவாய மாநாடு இலங்கை நடைபெறுவதை கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார்: இலங்கை அரசாங்கம்
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக