
By.Rajah...அரசும், ஊடகமும், நீதித் துறையும் ராஜபக்ஷேவின் குடும்பச் சொத்து ஆகிவிட்டது என்ற கொந்தளிப்பு, கடல் கடந்து கேட்கிறது! பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதி ஷிராணி பண்டார நாயக மீது நாடாளுமன்றத்தில் குற்றத் தீர்மானம், அரசுக்கு எதிரான செய்திகளை எழுதியதற்காக சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் பதவிப் பறிப்பு போன்ற சம்பவங்கள் இலங்கையைக் கொந்தளிக்கவைத்துள்ளன.பிரெட்ரிகா ஜான்ஸ்... சண்டே லீடர் ஆசிரியராக இருந்த லசந்தா...