siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன்

07.10.2012.By.Rajah.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் 10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வடிவுடையான், தற்போது கரணை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார்.
சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ள இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம். இந்தப் படத்தின் சிறப்பம்சம் 10 நாயகர்கள் நடிப்பதே.
அதேசமயம் 10 நாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளவர் நடிகை வித்யா பாலன் என்பது அதைவிட பெரிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
அதிரடி சண்டைப் படமாக உருவாக உள்ள சொக்கநாதனை ஹாலிவுட் பாணியில் எடுக்கவிருக்கிறாராம் வடிவுடையான்.
முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உண்மையாக இருந்தால், வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

ஹன்சிகாவின் புதிய அவதாரம்

07.10.2012.By.Rajah.கொலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் ஹன்சிகா, புதிய அவதாரமொன்றை எடுக்க போகிறாராம்.
இவர் தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன் மற்றும் சிங்கம்-2 என நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் நடிக்கிறார்.
தற்போது இந்த மூன்று மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹன்சிகா, என்னுடைய நீண்ட நாள் கனவு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது தான்.
இப்பொழுது மூன்று மொழிப் படங்களிலும் நடிப்பதால் இன்னும் வசதியாக இருக்கிறது என்கிறார்.

யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் பொலிஸாரால் மீட்பு

07.10.2012.By.Rajah.கிளிநொச்சியில்இருந்து சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்ட 20 மாடுகளை நேற்று முன்தினம் யாழ்.பொலிஸார் கைப்பற்றினர். இந்த மாடுகள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்டிருந்தன என்று பொலிஸார் கூறினர்.
யாழ்.பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் யாழ்.மனோகராச் சந்தியில் வைத்து பொலிஸார் இந்த மாடுகளைக் கைப்பற்றினர்.
மாடுகளைச் சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு வந்தவர்களைப் பொலிஸார் விசாரணைக்காகப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அத்துடன் மாடுகளும் யாழ்.பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன

இருபாலையில் கோரவிபத்து மினிபஸ் சாரதி உட்பட 3 பேர் சாவு;

 
07.10.2012.By.Rajah.படுகாயமுற்ற 9 பேர் வைத்தியசாலையில்இருபாலை, கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதியில் நேற்று நண்பகல் நடைபெற்ற கோர விபத்தில் மினி பஸ் சாரதி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். 9 பேர் காய மடைந்தனர்.
உயிரிழந்தவர்களும் காயமடைந்த வர்களும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த மூவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டுவந்த மினிபஸ்ஸும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தென்னிலங்கை பஸ் ஒன்றும் நேருக்கு நேர்வேகமாக மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.
நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மினிபஸ் சாரதியும் அதிலிருந்த பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தென்னிலங்கை தனியார் பஸ்ஸின் சாரதி, மற்றும் நடத்துநர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருபாலை, கற்பகப்பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதியில் அகலிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீதியில் ஒரு பக்கத்துக்கு மட்டும் காப்பெற் இடப்பட்டுள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பஸ்களும் காப்பெற் இடப்பட்ட பக்கமாக மிக வேகமாக வந்துள்ளன. கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவில் திரும்பியபோது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்துகொண்டிருந்த பஸ்ஸைக் கண்ட மினிபஸ் சாரதி விபத்தைத் தவிர்ப்பதற்காக கடுமையாக முயன்றதாகவும், ஆயினும் கணப்பொழுதில் இரு பஸ்களும் நேருக்கு நேர் பெரும் சத்தத்துடன் மோதி உருக்குலைந்ததாகவும் விபத்தில் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை அடுத்து அங்கு கூடிய மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்தவர்களை பெரும் சிரமப்பட்டு மீட்டு வாகனங்களில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தினர். மினிபஸ்ஸின் சாரதியை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.
மினிபஸ்ஸின் முன்பக்கம் முற்றாகச் சிதைந்து சிதலமானது. அத்துடன் தென்னிலங்கை பஸ்ஸின் சாரதி அமரும் இருக்கை உள்ள பக்கம் கடும் சேதத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் மினிபஸ் சாரதியான உடுப்பிட்டி ஆதியமலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்னலிங்கம் அமிர்தராஜ் (வயது34), அந்த பஸ்ஸில் பயணித்தவரான வேலாயுதம் செந்தில்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவேளை உயிரிழந்து விட்டனர்.
காயப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்தார். எனினும் அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை.
இந்த விபத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த சின்னையா சுப்பிரமணியம் (வயது58), கோப்பாயைச் சேர்ந்த குமரேசசர்மா (வயது29), வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த என்.சிவயோகநாதன் (வயது49), மினிபஸ் நடத்துனரான அல்வாய் வடக்கைச் சேர்ந்த கணேசரத்தினம் திவாகரன் (வயது20), தொண்டமனாறு, சந்நதி கோயிலடியைச் சேர்ந்த புஸ்பகுமார் தயாளினி (வயது28), யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரி (வயது35), வல்வெட்டித்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த ஜயந்தகுமார (வயது35), தென்னிலங்கை தனியார் பஸ் சாரதியான கே.துஷார (வயது40), அந்த பஸ்ஸின் நடத்துநர் ஆகியோர் கடும் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் உயிரை குடித்தது டெங்கு

07.102012.ByRajah.
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் தலை தூக்கியுள்ளது. டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த கொக்குவிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி நேற்று அங்கு உயிரிழந்தான்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை பிற்பகல் தாயொருவரும் அவரது பிள்ளையும், மற்றுமொருவருமாக 3 பேர் டெங்கால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை 5 பேர் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவரே சிகிச்சை பயனின்றி நேற்று மரணமானான். கொக்குவில் மற்றும் திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் குருநகரைச் சேர்ந்த சுமார் 6 பேர்வரை டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கொக்குவில், திருநெல்வேலி கலாசாலை வீதியில் சில வாரங்களுக்கு முன்னரும் 11 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றிருந்தனர்.
நேற்றுமுன்தினம்வரை பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பெரும்பாலும் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருவாரங்களுக்கு முன்னர் தெல்லிப்பளையிலும், வள்ளுவர்புரம் குடியிருப்பில் 3 பேர் டெங்கு நோயாலும் பீடிக்கப்பட்டதைத் தொடரந்து அங்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையால் அது கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இங்கு டெங்கு நடவடிக்கைகள் உடனுக்குடன் உரிய முறையில் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தியிருக்கலாம். மேலதிகாரிகளான யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்.பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி வைத்திய அதிகாரி ஆகியோர் இந்த விடயத்தில் தேவையான அளவு அக்கறை கொள்ளவில்லை என்று வைத்திய வட்டாரங்கள் குற்றம் சுமத்துகின்றன.
இதுதொடர்பில் யாழ்.பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "டெங்கு யாழ்.மாவட்டத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தவிர டெங்கு பரவும் இடங்களில் உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தின் இஸ்லாம் மதப் பிரசாரகர்

.
Sunday 07 October 2012 ,By.Rajah.அபு ஹம்சா அல்-மஸ்ரி அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்
இஸ்லாம் மதப் பிரசாரகரான அபு ஹம்சா அல்-மஸ்ரி உள்ளிட்ட ஐவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சனிக்கிழமை நாடு கடத்தப்பட்டனர்.
பயங்கரவாத பயிற்சி முகாம் அமைக்க சதி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இவர் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. இவரைத் தவிர, ஆதில் அப்துல் பாரி, காலித் அல்-ஃபவாஸ், பப்பர் அகமது, சையத் தல்ஹா எஹ்சான் ஆகிய நால்வரும் நாடுகடத்தப்பட்டனர்.
நியூயார்க் தென்மாவட்ட அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா இது குறித்து கூறியது: இவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு மைல்கல்லாகும்.
அல்-காய்தாவின் பயங்கரவாதச் செயல்களுக்கு இவர்கள் மூளையாக செயல்பட்டு பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தனர்.
பல வருடப் போராட்டத்துக்குப் பின் இவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வர முடிந்தது. பயங்கரவாதத்தை ஒழிப்போம் என அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சட்ட ரீதியான, நிர்வாக ரீதியானஅனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இதற்காக எத்தனை காலமானாலும் கவலையில்லை என்றார்.
ஹம்சா (54) ஒரு பிரிட்டிஷ் பிரஜை. இவர் அமெரிக்க மாஜிஸ்திரேட் முன்பாக அக்டோபர் 9ஆம் தேதி ஆஜர்படுத்தப்படுவார்.
1998ஆம் ஆண்டில் யேமனில் இரு அமெரிக்க பிரஜைகள் உள்பட 16 பேரை பிணையாக வைத்த சதியில் ஈடுபட்டதாக ஹம்சா மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்க மாகாணமான ஆரேகனில் பயங்கரவாத பயிற்சி முகாம் ஒன்றை உருவாக்க முயற்சித்ததாகவும் ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு உதவிகள் பெற முயற்சியெடுத்தார் எனவும் இவர் மீது குற்றச்சாட்டுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த பாரி, கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள், 224 பேரின் உயிரிழப்பு, ஆயிரக் கணக்கானோர் காயமுறச் செய்தது ஆகிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஃபவாஸ், அமெரிக்க பிரஜைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளுக்கு நாசம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரஜைகளான அகமது, எஹ்சான் ஆகியோர் செச்சன் முஜாஹிதீன், தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

குழந்தைக்காக கொழும்பில் உள்ள நார்வே தூதரகம்


Sunday 07 October2012..BY.Rajah.முன்இலங்கைத்தமிழர்கள் போராட்டம்குழந்தைகளை தங்களிடமிருந்து பிரித்து உறவினர்களிடம் கொடுத்த நார்வே அரசை கண்டித்து கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் முன் இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
நார்வேயில் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை வீடுகளில் பெற்றோர்கள் செய்யாவிட்டாலோ, அவர்களைச் சரிவர பராமரிக்காவிட்டாலோ குழந்தைகள் நல சேவைப் பிரிவு அதிகாரிகள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
முதல் கட்டமாக குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து, காப்பகத்தில் வைக்கின்றனர்.
பின்னர், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின், அக்குழந்தையைப் பெற்றோரின் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
அந்நாட்டு அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து இலங்கையைச் சேர்ந்த அனந்தராஜா உள்ளிட்டோர், கொழும்பில் உள்ள நார்வே தூதரகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இவர்கள் அனைவரும் நார்வேயில் குடிபெயர்ந்தவர்களாவர். அங்கு, இவர்களது குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்து உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனந்தராஜா கூறுகையில், ""எனது மூன்று குழந்தைகளை நார்வே அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டனர். இதே போன்ற பிரச்னையால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்காவிட்டால், விரைவில் ஆஸ்லோவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
இது குறித்து நார்வே தூதரக அதிகாரிகள் கூறியது:÷""வீடுகளில் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். குழந்தைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளுக்கு நார்வே அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சரியாக குழந்தைகளைப் பராமரிக்காத பெற்றோர் பற்றி உறுதியாகத் தெரியவந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்றனர்.
சில மாதங்களுக்கு முன் நார்வேயில் வசித்த இந்திய தம்பதியரின் 2 குழந்தைகளும், இதேபோன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

போலீஸுக்கு போக்கு காட்டிய பொன்முடி கைது.

         
Sunday 07 October 2012 .By.Rajah.கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் பதுங்கியிருந்தார். போலீசார், நேற்று காலை, அவரை கைது செய்ய சென்றபோது, காரில் ஏறி தப்பினார். வழியில், மூன்று கார்களில் மாறி, கிராமங்கள் வழியாக தப்பிய பொன்முடியை, போலீசார், அவரது வீட்டில் நேற்று மதியம் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த, பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் இருந்து மண் வெட்டி எடுக்க, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன், கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், தி.மு.க., பிரமுகர் ஜெயச்சந்திரன், சதானந்தன் ஆகியோர், 2007, அக்டோபர் மாதம் உரிமம் பெற்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட, செம்மண் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது.செம்மண் குவாரியை, வானூர் தாசில்தார் குமாரபாலன், ஆய்வு செய்தார். அப்போது, சதானந்தம் என்பவர், சிலருடன் வந்து, "குவாரிகள் எல்லாம் முன்னாள் அமைச்சர், அவரது மகன், உறவினர்களுக்குச் சொந்தமானது' எனக் கூறி, அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக, போலீசில், வானூர் தாசில்தார், புகார் செய்தார்.
புகாரில், "தி.மு.க., ஆட்சியின் போது, கனிம வள அமைச்சராக, கூடுதல் பொறுப்பை பொன்முடி வகித்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மகன் மற்றும் உறவினர்களுக்கு, செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்கினார். அவர்கள், நிபந்தனைகளை மீறி, மணல் எடுத்துள்ளனர். இதன் மூலம், அரசுக்கு, 28 கோடி ரூபாய், இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ராஜமகேந்திரன், குவாரி மேலாளர் சதானந்தம் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது, கனிம வளச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, தி.மு.க., பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவான முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்களை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
முன்ஜாமின் மனு:

முன்ஜாமின் கோரி, பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், மேலாளர் சதானந்தம் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த, நீதிபதி அக்பர் அலி, முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
செஞ்சியில் பதுங்கல்:

தலைமறைவாக இருந்த பொன்முடி,திடீரென நேற்று காலை, 9:12 மணிக்கு, செஞ்சிக்கு காரில் வந்தார். அரசுக்கு எதிராகவும், தன் மீது போடப்பட்ட வழக்கையும் கண்டித்து கோஷம் எழுப்பினார். அருகில் பூக்கடை வைத்திருந்த பெண்ணிடம், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான, தி.மு.க.,வின் பிரசார நோட்டீசைக் கொடுத்தார். பின், காலை, 9:16 மணிக்கு, அருகில் தயாராக நின்றிருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனுக்குச் சொந்தமான, சுமோ காரில் ஏறினார்.பொன்முடி வருகையை சற்றும் எதிர்பார்க்காத செஞ்சி போலீசார், சுதாரித்து, காரை மறிக்க முயன்றனர். இதற்குள் கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. காரை பின் தொடர, இரண்டு ஜீப்களில் போலீசார் புறப்பட்ட போது, போலீசாரின் கார்களை, தி.மு.க.,வினர் சுற்றி வளைத்து, மறியல் செய்தனர்.அவர்களை தள்ளிவிட்டு வந்த போலீசார், பொன்முடி சென்ற, முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனின் சுமோ காரை விரட்டிச் சென்றனர். விழுப்புரம் செல்வதற்குள் கைது செய்ய போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கஞ்சனூர் போலீஸ் நிலையம் முன், காரை மறித்து, கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.ஆனால், செஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே, பொன்முடி, வேறு காருக்கு மாறினார். மூன்று கார்களில் மாறி, கிராமங்கள் வழியாக விழுப்புரம் சென்றார்.காலை, 10:40 மணிக்கு, விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள, நகர தி.மு.க., அலுவலகம் முன் நடந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,சண்முகவேல் மற்றும் போலீசார், நகர, தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தனர். பொன்முடியிடம் கைது வாரன்ட்டை காண்பித்தனர். "வீட்டிற்குச் சென்ற பின் கைது செய்து கொள்ளுங்கள்' என, பொன்முடி, போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து, கட்சித் தொண்டர்கள் புடைசூழ, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட பொன்முடி, சண்முகபுரம் காலனியில் உள்ள வீட்டிற்குச் சென்றார். மதியம், 1 மணிக்கு, பொன்முடியை போலீசார் கைது செய்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.அவரிடம் விசாரணை செய்த போலீசார், மாலை, 3 மணிக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி கயல்விழி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்முடியை வரும், 19ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின், கடலூர் மத்திய சிறைக்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக


 Sunday 07 October2012.By.Rajah.உங்கள்உதவிகளைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! அண்மையில் மேனிக் பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கு என்று அழைத்து வரப்பட்ட போதும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாது, சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தமக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், காடுகளுக்குள் தாம் அநாதைகளாக விடப்பட்டுள்ளோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை இனக்கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் உதவிகளை கோரி வருகின்றனர். அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளே " எமது உறவுகளுக்கு நாமே கை கொடுப்போம் " என்று உங்கள் உதவியை இம்மக்களுக்கு நேரடியாகவோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவோ செய்யுமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இம்மக்கள் யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்கள். உங்கள் உதவிகள் இவர்களுக்கு எதிர்கால வாழ்வாதாரத்தை மையமாக வைத்து உங்கள் உதவிகளை மேட்கொள்ளுமாறு அன்பை கேட்டுக்கொள்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து


 Sunday 07 October2012..By.Rajah.ஏறலாம்என்றால்யாழகமேவந்துகப்பலில் ஏறிவிடும் !.யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார்.
இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட்டது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். இப்போதும் தினந்தோறும் வெளியேறி கொண்டிருகின்றார்கள். இதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று பேரினவாதம் முழு இலங்கையையும் சிங்கள பெளத்த மயமாக்கும் திட்டத்தை வெகு வேகமாக செய்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணம் பறி போய் விட்டது. திருகோணமலையும்., அம்பாறையும் இன்று தமிழரது மாவட்டங்கள் இல்லை. கிழக்கில் தமிழர் கணிசமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களினால் சுற்றிவளைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்துக்கு உள்ளேயும், புதிய வலயங்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன.
இப்போது வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு சிங்கள மாவட்ட அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல தமிழ் பகுதிகள் திருகோணமலையின் சிங்கள பகுதிகளுடன் சேர்க்கப்படுகின்றன. திருகோணமலையின் சிங்கள பகுதிகள், முல்லைதீவுடன் சேர்க்கப்படுகின்றன.
திருமுருகண்டி, கோப்பேபிலவு பகுதிகளில் மிகப்பெரும் இராணுவ குடும்ப குடியிருப்புகள் சீன உதவியுடன் கட்டப்படுகின்றன. மன்னாரிலும் அப்படியே. வன்னி பெருநிலத்தில் சிங்கள இராணுவ குடும்பங்களை குடியேற்றி இன குடி பரம்பல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது அரசின் திட்டம். கிழக்கை போன்று முல்லை, வவுனியா, மன்னார் உள்ளடங்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தையும் சிங்களமயமாக்குவது அவர்களது இலக்கு. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இவை நடந்து முடிந்துவிடும்.
அதுவரை, இலங்கை அரசும், இந்தியாவும், அமெரிக்காவும் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும்.
தமிழ் தலைமைகளிடம் இதற்கு எதிராக காத்திரமான வேலைத்திட்டம் எதுவும் இருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை. சர்வதேசம், சர்வதேசம் என்ற மந்திர உச்சாடனம் மட்டும் கேட்கின்றது. ஆனால், இந்த மந்திரம் மட்டும் தீர்வுகளை கொண்டு வந்து விட போவதில்லை என்பது எனக்கு தெரியும்.
வரலாற்று பெருமைகளையும், அன்று ஒருநாள் இருந்ததாக சொல்லும் உரிமைகளையும் பற்றி இப்போது வெளிநாடுகளில் இருந்து பேசிகொண்டிருப்பதில் எந்த பலனும் கிடையாது. இந்த பேச்சுகளை பேரினவாத ஆக்கிரமிப்பாளர்கள் எந்த விதத்திலும் கணக்கில் எடுப்பது இல்லை.
இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நான் பயன்படுத்த முன்னின்று செயல்படுகிறேன். சரத் பொன்சேகா என்பவரும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம்தான்.
அவரும் ஒரு கொலைக்காரர், போர் குற்றவாளி என்று சிலர் எனக்கு இப்போது அறிவுரை கூறுகிறார்கள். எனக்கு என்ன, இது எதுவும் தெரியாதா? இவர் மட்டும் அல்ல, எனக்கு இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களை பற்றியும் நன்கு தெரியும்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், வேறு எந்த தமிழ் அரசியல் தலைவர்களை விட எனக்குதான் இவர்களை நன்கு தெரியும். ஏனெனில் நான்தான் இவர்கள் எல்லோரிடமும் பழகி அவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறேன். எனவே, சரத் பொன்சேகா உட்பட, சிங்கள அரசியல் தலைவர்கள் பற்றி எனக்கு இந்த அறிவுரைகளை கூறி நேரத்தை வீணடிக்காதீர்கள். அவை எனக்கு தேவையில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
இலங்கையை ஆண்ட அனைத்து அரசாங்கங்களும் பேரினவாத கொள்கைகளைத்தான் பின்பற்றின. இது அடிப்படை உண்மை எனக்கு பால பாடம். ஆனால், இந்த மகிந்த அரசைபோல் எந்த ஒரு அரசாங்கமும், இந்த அளவுக்கு அப்பட்டமான, இனக்கொலை அரசாங்கமாக இருக்கவில்லை. இந்த அரசைப்போல் தமிழனின் இருப்பை எவரும் அழிக்கவில்லை. தமிழர் வாழ்வின் எல்லாவித அம்சங்களையும் தேடி, தேடி தாக்கி அழிக்கவில்லை.
எனவே இந்த அரசாங்கத்தை எந்த ஒரு பிசாசுடன் சேர்ந்தாவது அகற்ற வேண்டுமென நான் விரும்புகிறேன்.
எனவேதான்,
(01 ) முதலில் நாட்டைவிட்டு வரையறை இல்லாமல் தமிழர் வெளியேற கூடாது என சொல்லுகிறேன். அதன் அர்த்தம் இங்கு உள்நாட்டில் நிலைமை சீராகிவிட்டது என்பது அல்ல. ஆனால், நாம் நாட்டில் இருந்து போராடவேண்டும். வேறு வழியில்லை. எங்களுடன் இணையுங்கள்.
(02 ) அதேபோல், ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டவர்கள், தமிழ் மாகாணங்களில் இந்த அரசுக்கு எதிராகவும், நாடுமுழுக்க இந்த அரசை அகற்றவும், இங்கே நாம் நடத்த விளையும் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க எமக்கு காத்திரமான முறையில் உதவ வேண்டும்.
இவை நடைபெறாவிட்டால், இங்கு தமிழர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான். இதுதான் இங்கு இன்று நிலவும், (ground situation) யதார்த்தம்