| 07.10.2012.By.Rajah.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் 10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
|
தமிழில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வடிவுடையான், தற்போது கரணை
வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ள இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம். இந்தப் படத்தின் சிறப்பம்சம் 10 நாயகர்கள் நடிப்பதே. அதேசமயம் 10 நாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளவர் நடிகை வித்யா பாலன் என்பது அதைவிட பெரிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அதிரடி சண்டைப் படமாக உருவாக உள்ள சொக்கநாதனை ஹாலிவுட் பாணியில் எடுக்கவிருக்கிறாராம் வடிவுடையான். முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது |
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன்
ஞாயிறு, அக்டோபர் 07, 2012
செய்திகள்








