siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

இங்கிலாந்தின் இஸ்லாம் மதப் பிரசாரகர்

.
Sunday 07 October 2012 ,By.Rajah.அபு ஹம்சா அல்-மஸ்ரி அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்
இஸ்லாம் மதப் பிரசாரகரான அபு ஹம்சா அல்-மஸ்ரி உள்ளிட்ட ஐவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சனிக்கிழமை நாடு கடத்தப்பட்டனர்.
பயங்கரவாத பயிற்சி முகாம் அமைக்க சதி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இவர் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. இவரைத் தவிர, ஆதில் அப்துல் பாரி, காலித் அல்-ஃபவாஸ், பப்பர் அகமது, சையத் தல்ஹா எஹ்சான் ஆகிய நால்வரும் நாடுகடத்தப்பட்டனர்.
நியூயார்க் தென்மாவட்ட அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா இது குறித்து கூறியது: இவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு மைல்கல்லாகும்.
அல்-காய்தாவின் பயங்கரவாதச் செயல்களுக்கு இவர்கள் மூளையாக செயல்பட்டு பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தனர்.
பல வருடப் போராட்டத்துக்குப் பின் இவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வர முடிந்தது. பயங்கரவாதத்தை ஒழிப்போம் என அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சட்ட ரீதியான, நிர்வாக ரீதியானஅனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இதற்காக எத்தனை காலமானாலும் கவலையில்லை என்றார்.
ஹம்சா (54) ஒரு பிரிட்டிஷ் பிரஜை. இவர் அமெரிக்க மாஜிஸ்திரேட் முன்பாக அக்டோபர் 9ஆம் தேதி ஆஜர்படுத்தப்படுவார்.
1998ஆம் ஆண்டில் யேமனில் இரு அமெரிக்க பிரஜைகள் உள்பட 16 பேரை பிணையாக வைத்த சதியில் ஈடுபட்டதாக ஹம்சா மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்க மாகாணமான ஆரேகனில் பயங்கரவாத பயிற்சி முகாம் ஒன்றை உருவாக்க முயற்சித்ததாகவும் ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு உதவிகள் பெற முயற்சியெடுத்தார் எனவும் இவர் மீது குற்றச்சாட்டுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த பாரி, கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள், 224 பேரின் உயிரிழப்பு, ஆயிரக் கணக்கானோர் காயமுறச் செய்தது ஆகிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஃபவாஸ், அமெரிக்க பிரஜைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளுக்கு நாசம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரஜைகளான அகமது, எஹ்சான் ஆகியோர் செச்சன் முஜாஹிதீன், தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.