அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்
பகிர்ந்துள்ளன.
மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவதாக குறித்த தகவல்
தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும், குறிப்பிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை ஏற்படுத்தும் வகையிலான உத்தரவை டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். குறித்த உத்தரவிற்கு உலகளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இலங்கையர்களும், அமெரிக்க குடிவரவு திணைக்களத்தினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக