இத்தாலியின் மெசீனா நகரில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இலங்கையர்கள் பலரிடம் கொடுத்த பணத்திற்கு வட்டி பணம் பெற்றுக்கொண்டிருந்த போதே இத்தாலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யும் போது இவரிடம் வட்டிபணம் 250 யூரோக்கள் இருந்ததாகவும், அத்துடன் கடவுச் சீட்டுக்கள் பலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>