siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 11 அக்டோபர், 2012

வெடிகுண்டுடன் விமானத்தில் பயணித்த

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஜப்பானியர் அமெரிக்காவில் கைது விமானத்தில் கையெறி குண்டை எடுத்து சென்ற ஜப்பானியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில கடந்த 2001ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு விமான பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
நகம் வெட்டி, கத்தரிகோல், சிறு கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தகர்க்க சதி செய்யும் பயங்கரவாதிகள் திரவ வடிவில் வெடிமருந்துகளை உடலில் மறைத்து எடுத்து செல்ல முயற்சி செய்கின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஜப்பானை சேர்ந்த யோங்டா ஹுயாங் ஹாரிஸ்(வயது 28) என்ற நபர் 5ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய போது அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார்.
தீயினால் பாதிக்காத பேன்ட் போட்டிருந்தார். புகையை கிளப்பும் கையெறி குண்டும், விஷவாயுவிலிருந்து காத்துக் கொள்ளும் முகமூடியும் உள்ளிட்டவைகளை வைத்திருந்தார்.
சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள், அவரை பொலிசிடம் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரணை நடத்தவும் ஒத்துழைக்கவில்லை.
ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினால் எதையும் சொல்ல முடியாது. பகிரங்கமாக விசாரணை நடத்தினால் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹாரிஸ், பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். தற்போது அவர் ஜப்பானில் வசிக்கிறார்.
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விமானத்தில் கொண்டு வந்ததற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரை அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்படும்.

சுவிஸில் பேய் மழை: மக்கள் கடும் அவதி

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.சுவிட்சர்லாந்தின் Schwyz, Glaris, Zug and Saint Gallen ஆகிய இடங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த பேய் மழையால் இப்பகுதிகள் தண்ணீரால் நிரம்பி வழிகின்றன. மேலும் சுவிஸில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் அரசு நிறுவனங்களில் தண்ணீர் புகுந்துள்ளன.
இந்த வருடத்தில் பெய்த கடும் மழை என்று சுவிஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையை எதிர்பார்த்தாலும் இந்த அளவுக்கு பெய்யும் என தாங்கள் நினைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் சில பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளுக்குள் நுழைய மக்கள் தீயணைப்பு மற்றும் மாநகர காவல் துறையிடம் உதவி கோரியுள்ளனர்.
மேலும் கனமழையால் சுவிஸின் Basel, Kembs இடையே கார்கோ போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கென்யாவில் எம்.பி.க்களுக்கு அதிகளவு போனஸ்: மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்ரிக்க நாடுகளிலேயே கென்யா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் சம்பளம் அதிகம். ஒவ்வொரு நபரும் 5.7 லட்ச ரூபாய் மாத சம்பளமாக பெறுகின்றனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கென்ற நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் உறுப்பினர்களுக்கு போன்ஸ் அளிக்கும் சட்டம் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொருவருக்கும் 60 லட்ச ரூபாய் போனசாக கிடைக்கும்.
கென்யாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாததை கண்டித்து, கடந்த மாதம் மூன்று வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
இதே போன்று சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அளிக்கும் திட்டம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதனை கண்டித்து ஏராளமான மக்கள் நைரோபி நகரில் ஜனாதிபதி மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பீர் போத்தலை திருடிய கன்னியாஸ்திரி (வீடியோ இணைப்பு)

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
நியூயார்க்கில் உள்ள கடையொன்றில் கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் உள்ள கடை ஒன்றுக்கு கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார்.
அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று, பீர் போத்தல் ஒன்றினை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார், ஆனால் அவர் பீர் திருடியதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.
பின்னர் இருப்பை சரிபார்த்த போது பீர் போத்தல் ஒன்று குறைந்து இருப்பது தெரியவந்தது. எனவே கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடியது தெரியவந்தது.
ஆனாலும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. உண்மையிலே அவர் கன்னியாஸ்திரிதானா? அல்லது கன்னியாஸ்திரி போல உடை அணிந்து திருடினாரா? என்பது தெரியவில்லை.
இந்த காட்சி யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிறுமியை சுட்டவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி பரிசு:

 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய 14 வயது சிறுமியை சுட்டது யார் என்று தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசி வந்தார். இவருக்கு அமைதிக்கான தேசிய விருதை வழங்கி அந்த நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி மலாலாவை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு லேடி ரீடிங் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைமை மருத்துவர் மம்தாஷ் கான் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுபற்றி கான் கூறுகையில், மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்தார். அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மலாலாவின் மாமா அகமது ஷா கூறுகையில், மலாலாவின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் அவளை வெளிநாடுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்கு அவளது உடல்நிலை ஒத்துழைப்பது சிரமம் என்றும், இன்னும் 10 நாள்களுக்கு அவரது நிலைமை குறித்து எதுவும் கூறமுடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில், மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.
தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார். அதனால்தான் தாக்குதல் நடத்தினோம். அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி

                                                                                                                                 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012,By.Rajah. சிரியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது.
180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின.
இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.