siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 27 பிப்ரவரி, 2013

சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்,,,


அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.
நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார். இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன் பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும். இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள்.அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்கள் ஆகும்.{புகைப்படங்கள்,}


செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மின் நிலையத்தில் திடீர் கோளாறு: இருளில்,,,

 
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்சார தடை ஏற்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
குறிப்பாக ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவர், ஐதராபாத், குவெட்டா ஆகியவை இருளில் மூழ்கின.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள 1,200 மெகாவாட் தனியார் அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
பின்னர் இஸ்லாமாபாத் மின் துறையினர் மாற்று ஏற்பாடுகள் செய்து இஸ்லாமாபாத் உள்பட சில நகரங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்தனர்.
இந்த திடீர் தடையால் நாட்டில் 80 சதவீதப்பகுதி மின்சாரம் இன்றி இருந்ததாகவும், இதன் விளைவாக விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது
 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மருத்துவராக ஆங்கிலம் அவசியம்: பிரிட்டன் ?


பிரிட்டனில் பொதுமருத்துவராகப் பணிபுரிய நோயாளிகளின் கருத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் அவசியம் என்ற உத்தரவை அரசு உறுதி செய்துள்ளது.
அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் உபானிக்கு(Daniel Ubani) ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்தன்மூலம் லீட்ஸ் பிரைமரி கேர் அறக்கட்டளை நடத்திய மருத்துவமனை இவரை வெளியேற்றியுள்ளது.
இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதால் ஆங்கிலம் தெரியாத மருத்துவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இதனால் இவர்களை யாரும் வேலைக்கு அமர்த்தகூடாது எனவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது மருத்துவக் குழுவின் தலைமை நிர்வாகியான நியால் டிக்சன்(Niall Dickson) நோயாளிகளின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சுகாதார அமைச்சர் டேன் போல்ட்டர்(Dean Royles) கூறுகையில், நாம் சொல்வது மருத்துவருக்குப் புரியும் எனவும் நம் சிரமத்தை அவர் அறிவார் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கு வரவேண்டும். அதற்கு நோயாளி பேசும் ஆங்கிலத்தை மருத்துவர் புரிந்து கொள்ளும் மொழித்திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து நோயாளிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியான கேத்தரீன் மர்ஃபி(Katherine Murphy) இதனை வரவேற்றுள்ளார்.
 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த தாய்மார்கள்


குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.
ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது.
இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை.
இதையடுத்து தாய்மார்கள் சிலர் கூடிப் பேசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 10 பெண்மணிகள் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காலண்டர் தயாரிப்பது என்றும் அதை விற்று அதில் வரும் காசை பள்ளி நிர்வாகத்தின் பேருந்து சேவைக்குத் தருவது என்றும் முடிவெடுத்தனர்.
இதையடுத்து 10 பேரும் விதம் விதமாக போஸ் கொடுத்தனர். சிலர் டாப்லெஸ்ஸாவும், சிலர் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்தனர். இந்த காலண்டரை விற்பனைக்கும் விட்டனர்.
அதில் அவர்களுக்கு நல்லவரவேற்பும், வருமானமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர்களிடம் வருகிற யூன் மாதம் வரைக்கும் பேருந்தை இயக்குவதற்குத் தேவையான நிதி கிடைத்து விட்டதாம்.
இதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இதேபோல நிர்வாண காலண்டர் போட்டு நிதி சேகரித்து தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க திட்டமிட்டுள்ளனராம்
 

சனி, 23 பிப்ரவரி, 2013

நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன். .


மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன்(வயது 94) இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியுள்ளார்.
இவரது மனைவி குவண்டோலின் (வயது 89), பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இவர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வு கடந்த 16ம் திகதி நடைபெற இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அணுசக்தி உபகரணங்களை ஈரான் நிறுவுகிறது


ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகள் கூறி வருகின்றன.
உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுதக்குறைப்பு குறித்து வரும் 26ம் திகதி ஈரானுடன் கஜகஸ்தானில் பேசவுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் ஒன்றில் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுவதாக ஐ.நா. அணு முகமை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூறியிருப்பதாவது: கடந்த 6ம் திகதி, ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில், ஐ.ஆர்.-2எம் செண்ட்ரிபியூசு என்ற அதிநவீன அணுசக்தி உபகரணத்தை நிறுவத் தொடங்கியதை ஐ.நா. அணு ஏஜென்சி கவனித்துள்ளது. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஐ.ஆர். 1-ஐ காட்டிலும் இது மிகவும் அதிநவீனமான செண்ட்ரிபியூசு ஆகும்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 5 சதவிகிதம் பயன்படுத்தும் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை விட, 20 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் போர்டோ அணுசக்தி நிலையம் உலக மக்களை பெரிதும் கவலையடைய வைத்திருக்கிறது.
மேலும் இது அணுஆயுதம் தயாரிக்க தேவையான, 90 சதவிகிதம் அளவிற்கு அது நெருங்கிவருவதும் கவலை அளிக்கிறது என கூறியுள்ளது.
 

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ,,,

ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் "இணைய கண்ணாடி"களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது. இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் கொண்டு எளிதில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பங்கு பெறுபவர்கள் அமெரிக்காவில் வசிக்க இவர்கள் 50 வார்த்தைகளில் இந்த கண்ணாடி கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று விவரிக்கும் விண்ணப்பத்தை வரும் புதன் கிழமைக்குள் கூகுள் பிளஸ் அல்லது டுவிட்டர் மூலமாக அளிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் எத்தனை நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் என்று தெரிவிக்கவில்லை. கண்ணாடி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த கண்ணாடிகள் அடுத்த வருடம் சந்தைகளில் கிடைக்கும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் சில கண்ணாடிகளை கம்ப்யூட்டர் வல்லுனர்களுக்கு 1500 டொலருக்கு விற்பனை செய்திருக்கிறது. சந்தைக்கு வரும் இணையக் கண்ணாடிகளின் விலை ஸ்மார்ட் போன் விலையை விட கூடுதலாகவும், 1500 டொலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.{காணொளி}

இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியபிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் தலைமையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாலியல் தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 முதல் 35 சதவீதத்தை இவர் பெற்றுக் கொண்டதாகவும் பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ரிஷிக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறியுள்ள

தொடர்ந்தால் வடகொரியா மீது புதியபுதிய தடைகள்: .....


வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரியா ஜனாதிபதி மியூங் பக் எச்சரித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன.
இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அது தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
வடகொரியா சமீபத்தில் மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதையடுத்து அதன் மீது ஐ.நா. மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

பிரித்தானியா பெண்கள் கொந்தளிப்பு,,


பிரித்தானியாவில் சிறுவனுக்கு காண்டம் விற்ற கடைக்காரருக்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா ஓப்பி, என்பவர் தன் பத்து வயது மகனுக்கு கை செலவுக்கு பணம் தந்தார்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில் 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்" விற்ற கடைக்காரரிடம் சண்டை போட்டார்.
இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில், கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. மேலும் குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம் பிரித்தானியாவில் இல்லை.
ஆணுறைக்குள் நீரை நிரப்பி, தண்ணீர் பந்து போல விளையாடுவான் என்று நினைத்து விற்றோம் என்றார். இதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குழந்தைகளுக்கு ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும் இந்த விடயத்தில் கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்
 

புதன், 20 பிப்ரவரி, 2013

பொருளாதார வளர்ச்சி 12%,,,,,,,,,,

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடந் ஆண்டில் (2012) சுமார் 12 சதவீதத்தினால் வளர்ச்சி கண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
குறைந்த மட்ட (6%) பணவீக்கம் மற்றும் சிறந்ததோர் விவசாய சாகுபடி
போன்றதான நிலைமைகள் ஆப்பானிஸ்தான் நாட்டின் பொருளாதார
வளர்ச்சியினை உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது
ஆப்கானிஸ்தான் போன்று, போருக்குப் பின்னான  இலங்கைப்
பொருளாதாரத்தினால் (முன்னரும் கூட) உயர் மட்ட பொருளாதார
வளர்ச்சி அல்லது உறுதிப்பாட்டினை அடைய  முடியாது போயுள்ளது.
இதற்கு, இலங்கையின் தனியார் முதலீடு, ஏற்றுமதிக் கட்டமைப்பு,
ஊழியர்களின் உற்பத்தித் திறன், நல்லாட்சி மற்றும் பாதுகாப்பு
போன்றவற்றில் காணப்படும் பலவீனங்கள் ஆகியவற்றுடன்,
கால நிலை வரட்சி மற்றும் சர்வதேச பொருளாதார மந்தம்
போன்றதான நிலைமைகள் போருக்குப் பின்னான இலங்கைப்
பொருளாதார வளர்ச்சியினை தொடர்ந்தும் பாதித்து வருவதாக
பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

வெந்நீர் ஊற்றிய மனைவி!,,,

கணவன் கள்ளத் தொடர்பு பேணிவருவதை பொறுக்கமுடியாத மனைவியொருவர் அவரது ஆணுப்பின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவமொன்று கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

வடகொலம்பியாவின் சிரேடே நகரில் வசித்துவருபவர் யோலிவெல் லோபஸ். இவரின் கணவர் நெபர் நெடான்.

சம்பவ தினத்தன்று நெடான் அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்துள்ளதுடன் நண்பர்களுடன் இரவுப்பொழுதைக் கழித்ததாகவும் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் நெடானுடன் கள்ளத்தொடர்பை பேணிவரும் பெண் யோலிவெல் லோப்ஸிற்கு அழைப்பை மேற்கொண்டு அவரது கணவர் தன்னுடன் பொழுதைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆத்திரமடைந்த லோபஸ் கணவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளார்.

நெடான் இதனை அறிந்திருக்காத நெடான் யோலிவெல் லோபஸூடம் பொய்யைக் கூறி படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

கணவன் ஆழ்ந்து உறங்கும் வரை காத்திருந்த லோபஸ் வெந்நீரை அவரது ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பாக்காத நெடான் வலிதாங்காமல் அலறியுள்ளார். அவரது அலறல் தொலைவில் அமைந்துள்ள அயல்வாசிகளுக்கும் கேட்டுள்ளது.

இதனை அடுத்து உடனே அங்கு வந்த அவர்கள் நெடானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நெடானில் ஆணுறுப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலை அடுத்து லோபஸ் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேர்ந்த பரிதாபம்: பிரித்தானியா தம்பதியினர் பலி,,


சைக்கிளில் உலகை வலம் வந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஓவியர்கள் பீற்றர் ரூட் (வயது 34) அவரது மனைவி மேரி தாம்சன் (வயது 34) இருவரும் சைக்கிளில் உலகை சுற்றிவர திட்டமிட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இருவரும் ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட நாடுகளை கடந்தனர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி, தாய்லாந்தில் பாங்காக் நகரத்தருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது
 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மாணவர்கள் விளையாடிய கற்பழிப்பு விளையாட்டால் அதிர்ச்சி,,,பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள், "கற்பழிப்பு விளையாட்டு" என்ற பெயரில் விளையாடிய விளையாட்டு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக "ரேப் கேம்" என்ற பெயரில் வீடியோ கேம் ஒன்று உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது.
ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கற்பழிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பினாலும் சிலர் அதை ரகசியமாக விளையாடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் கிழக்கு சசசெக்ஸ் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் உணவு இடைவேளையின் போது 10 முதல் 13 வயதுள்ள மாணவர்கள், இந்த பெயரில் உள்ள விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாணவன் மற்றவர்களை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தான் விளையாட்டின் விதி என்றாலும் ரேப் கேம் என அவர்கள் அதற்கு பெயரிட்டு விளையாடியது தான் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குழந்தைகள் இவ்வளவு மோசமான வார்த்தையை எப்படி கற்றுக்கொண்டனர் என அவர்கள் கவலையுற்றனர்.
எனினும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து "தப்பிப் பிழைக்கும் ஆட்டம்" என அந்த விளையாட்டுக்கு தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

பிஸ்டோரியஸ் காதலி கொலை வழக்கில் திருப்பம்.

காதலியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டை ஒன்றை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்றதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஸ்டோரியஸ் வாக்குமூலத்தில் திருடன் வந்து விட்டான் என்று கருதி சுட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அதன் பின்னர்தான் பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் பிஸ்டோரியஸின் காதலி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது இதற்கிடையே, ரீவாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துயுள்ளதையடுத்து அதில் ரீவாவின் மண்டை ஓடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், நசுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ஒரு ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டையும் சிக்கியுள்ளதால் ரீவாவை பிஸ்டோரியஸ் முதலில் மட்டையால் சரமாரியாக அடித்துக் காயப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிரிக்கெட் மட்டை சிக்கியிருப்பதையடுத்து பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 பிப்ரவரி, 2013

விமான தளத்தை கைப்பற்ற நிகழ்ந்த சண்டையில்,,,


சிரியாவின் அலெப்போவில் அமைந்திருக்கும் சர்வதேச மற்றும் முக்கிய இராணுவ விமான தளத்தை கைப்பற்றுவதற்கு நிகழ்ந்த முற்றுகைப் போரில் கடந்த இரு நாட்களில் மட்டும் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பிரித்தனை தளமாக கொண்டு சிரியாவைக் கண்காணிக்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான ராமி அப்துல்-ரஹ்மானும் உறுதிப் படுத்தியுள்ளார்.
சிரிய கிளர்ச்சிப் படை அலெப்போவின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் பாரிய முற்றுகை போரை ஆரம்பித்தனர். தமது கடும் முயற்சியின் பின்னர் இராணுவ சோதனைச் சாவடி அமைந்துள்ள பாதுகாப்புப் பிரதேசமான பிரிகேட் 80 தளத்தை கிளர்ச்சிப்படையினர் கைப்பற்றினர்.
எனினும் விமான நிலையமும் இராணுவ விமான ஓடு பாதைகளும் அரச படைகளின் கைவசமே தொடர்ந்து உள்ளன. இரு தரப்பினரும் ஷெல் வீச்சுக்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு கிளர்ச்சிப் படைத் தளபதி அப்துல் ஜப்பார் தகவல் அளிக்கும் போது சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கேயுள்ள நகரமான டெயிர் எல்-ஷௌர் இன் பெரும்பாலான பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையினர் இதை இழக்காமல் இருக்கக் கடினமாகப் போராடி வருகின்றனர்.
இங்கு அரச படைகளால் விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அரச படைகள் இரு குழந்தை உட்பட 11 பேரைக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் கிளர்ச்சிப் படையினர் அரச படைகளின் இரு யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011 மார்ச் மாதம் தொடங்கிய சிரிய புரட்சி இதுவரை 70 000 பேரின் உயிரை காவுகொண்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.
இங்கு நடைபெறும் வன்முறைகளை நினைவில் கொண்டு சிரிய ஜனாதிபதி அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல அரபு நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மாறாக ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.
சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் முக்கிய நாடான ரஷ்யா அங்கு நடைபெறும் உயிரிழப்புக்களைக் கருத்திற் கொண்டு தனது ஆயுத விற்பனையை நிறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளது
 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பாக்கி ஏந்திய காவல்படையுடன் நடந்த ஜனநாயகத்வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் தலைநகர் அகர்த்லாவில் உள்ள வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி சாவடியைக் கண்காணிக்கிறார். இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் திரிபுரா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதிக்கும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்து வரும் வேளையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமைதியாக நேற்று வாக்குப்பதிவுகள் நடந்தேறின.

மின் உற்பத்தி நிலையத்தை சீனாவுக்கு விற்பனை,,,


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை அரச தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த மின் நிலையம் 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது:,,


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 13 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒருதலைப்பட்சமானது.

சனல்-4 காணொளி, வவுனியா, வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், புலிகளின் நினைவுத் தூபிகள் அழிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஹோட்டல் ஒன்று நிர்மானிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கைகள் ஒரு தலைப்பட்சமானது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது

காதலர் தின வாழ்த்துக்கள்,,,,

அன்பே!
உன் பார்வை
பட்டால் போதும்
உன் பாதம்
தொட்ட இடத்தில்
... நான்
சாதம் போட்டு
சாப்பிடுவேன்..!

எல்லா நண்பர்களுக்கும் எனதுகாதலர் தின வாழ்த்துக்கள்,,,காதலிப்பவரை மட்டும் அன்புடன் காதலியுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளர்க வளமுடன் ,,நன்றி ,,,,,,

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கமலேஸ் சர்மா உறுதியளித்ததாக வெளியான செய்தி பிழையானது

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பரில் இலங்கை கொழும்பில் நடைபெறும் என்பதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறான உறுதிமொழி எதனையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்படுமானால் அதனை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு’வால் வெளியிடப்படும். இந்தநிலையில் கமலேஸ் சர்மா தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று மாத்திரமே உகு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதை பொதுநலவாய அமைப்பு செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகமவை கோடிட்டு நேற்று உள்ளுர் ஊடகங்களில், பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடக்கும் என்பதை கமலேஸ் உறுதிப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் இது பிழையான செய்தி என்று குறிப்பிட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு, இலங்கையில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சர்மா, தமது பயணத்தை நாளை 13ம் திகதி முடித்துக்கொண்ட பின்னர், தமது அமைப்பினால் நிலைப்பாட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி பொதுநலவாய மாநாடு இலங்கை நடைபெறுவதை கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார்: இலங்கை அரசாங்கம்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள..

<
செர்பிய பிரதமரை நேர்காணல் செய்த பெண், உள்ளாடை அணியாத விவகாரம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி' சேனல் ஒன்று, "மிஷன் இம்பாசிபிள்' என்ற பெயரில் வேடிக்கை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. மாடல் அழகியான, ப்ராங்கா நெசிவிக், பிரதமர் இவிகா டேகிக்கை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
நேர்காணலின் போது, உள்ளாடை அணியாமல், குட்டை பாவாடை அணிந்திருந்த அந்த பெண், கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். பேட்டி கண்ட பெண், காலை மாற்றி அமரும் போது, அவர், உள்ளாடை அணியாததை, பிரதமர் பார்ப்பது போன்று, வீடியோ ஒளிபரப்பானது.

இந்த சம்பவம், செர்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."நாட்டை அவமதிக்கும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்களை, பிரதமர் அலுவலகம் தண்டிக்காமல் விடாது' என, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.நிகழ்ச்சியை, "டிவி'யில் ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்த அந்த சேனல், நிகழ்ச்சியின் முன்னோட்டத்தையும், தன் வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் ,,,,

முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பெப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். சிங்களப் பேரினவாதம் 2008-2009 ஆண்டு காலகட்டத்தில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்துகொண்டிருந்தபோது, ஐ.நா. சபையும், அதன் உறுப்பு அமைப்புகள் சிலவும், சர்வதேச சமூகமும் நம்பிக்கைக்குரியன அல்ல என்பதை உலகுக்கு உரக்க எடுத்துரைத்தார் முருகதாசன். இந்த அமைப்புக்கள் அரச பயங்கரவாதத்தை ஆதரிப்பவை, துன்புறும் ஏழை மக்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டா என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சார்ல்ஸ் பெற்றி எனும் ஐ.நா. ஊழியர் ஒருவர் தயாரித்து 13.11.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை முருகதாசனின் தீர்க்கதரிசனக் கருத்துக்களை உறுதிப்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல, காவல்காரனே களவு செய்தது போல, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன், அவரது மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி, ஐ.நா. ஊழியர் விஜய் நம்பியார், அவரது தம்பியும் ராஜபக்சே அரசின் இராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியார், ஐ.நா. ஊழியர் ஜான் ஹோம்ஸ் போன்ற பலர் தமிழீழத் தமிழருக்கு எதிராக ஒரு மாபெரும் கபட நாடகத்தை, துரோகத்தை அரங்கேற்றினர். தன் மக்களுக்காக இன்னுயிர் ஈந்த ஈகி முருகதாசன் அவர்களை நினைவு கூர்ந்து, தமிழர்களை வஞ்சித்த ஐ.நா.வின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது காலத்தின் கட்டாயம்; ஒவ்வொரு தமிழனின் கடமை. “மே 17 இயக்கம்” முன்னெடுக்கும் இந்தக் கடமையில் இடிந்தகரை மக்களாகிய நாங்களும் இணைந்துகொள்கிறோம். பிப்ரவரி 12, 2009 அன்று காலை 10 மணிக்கு போராட்டப் பந்தலில் ஈகி முருகதாசனுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, ஐ.நா.வின் அயோக்கியதனத்தை ஓர் ஆங்கில ஆவணமாக தயாரித்து, எங்கள் பகுதி தமிழ்க் கடலில் மிதக்க விடுவது என்று தீர்மானித்திருக்கிறோம். அனைவரும் வருக. வணக்கம். போராட்டக் குழு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் பெப்ரவரி 11, 2013 பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகை போராட்டம் ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அணைத்து தியாக உள்ளங்களை நினைவு கொண்டு- முற்றுகை இடுவோம். பொதுமக்களை காக்கும் சர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா அதிகாரிகள் பான்-கி-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோரை விசாரி. தமிழீழ விடுதலையை தடுப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைத்துள்ள ஐ.நா பொது வாக்கெடுப்பினை உடனே நடத்து. மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில, போரில் சிக்கிய தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புவதை ஐ.நா நிறுத்தியது. உணவையும், மருந்துகளையும் தடை செய்வது போர் குற்றம். (இறுதியாக அனுப்பிய உதவி பொருட்களில் உணவு- மருந்துக்கு பதிலாக கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை ஐ.நாஅனுப்பியது). இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததன் மூலம் போரை தொடர்ந்து நடத்த அனுமதித்தது.(இன்றுவரை இந்த எண்ணிக்கையை வெளியிடவில்லை). இலங்கை அரசு செய்த போர்குற்றங்கள், படுகொலை குற்றச்சாட்டுகளை புலிகளின் மீது சுமத்தச் சொல்லி கீழ்மட்ட அதிகாரிகளை ஐ.நா நெருக்கியது. போர்முனைக்கு சென்று நடக்க இருக்கும் இனப்படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் கொழும்பு விடுதியை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்தது. இனப்படுகொலையை முடித்த்தை வெற்றிவிழாவாக கொண்டாடிய இலங்கை அரசு விழாவில் பான்-கி-மூன் பங்கெடுத்து சிங்களர்களை வாழ்த்தியது. சனல்4 காணொளியை ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க மறுத்து, இலங்கை அரசு தயாரித்த விளம்பர காணொளியை பான்- கி-மூன் காட்டியது. சர்வதேச விசாரணை வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் சொன்னதை மறுத்து “இலங்கையே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்” என்று பான்-கி-மூன் சொன்னது. தமிழர்களை கொன்ற இந்திய அமைதிகாப்பு படையில் வேலை செய்த “சித்தார்த்” என்பவரே பான்-கி-மூனின் மருமகன். இனப்படுகொலை போரின் அலோசகர் சதீஸ் நம்பியாரே, இனப்படுகொலையை தடுக்கும் பொறுப்பினை ஏற்ற விஜய் நம்பியாரின் உடன் பிறந்த அண்ணன். இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க பான்-கி-மூன் இலங்கைக்கு கால அவகாசம் அளித்தது, என பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. “தமிழர்களை இலங்கை அரசு நன்றாக காப்பதாக” தற்போது கூறி வரும் ஐ.நாவின் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்தவும், 18 தமிழர்கள் தீயிட்டு தியாகம் செய்தும் தடுத்து நிறுத்த முடியாத இனப்படுகொலை போரின் பின்னனியில் ஐ. நாவும், இந்திய அரசும் வேலை செய்ததை கண்டிக்கவும், தமிழீழ விடுதலையை அறிவிக்க கோரியும் தவறாது கூடுவோம். 2009யில் நாம் தடுக்க தவறிய இனப்படுகொலைக்கு இன்றாவது நியாயம் கேட்க ஒன்று திரள்வோம். தமிழர்களுக்கு துரோகம் செய்த ஐ.நாவின் அதிகாரிகளுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான தொடர் போராட்டத்திற்கு தயாராவோம். கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நியாயம் கேட்க இனியாவது ஒன்றாவோம். நீதி கேட்டு வீதிக்கு வருவோம். தமிழின இயக்கங்களே, தமிழர்களே கைகோர்ப்போம். 2009யில் செய்யாததை செய்து முடிப்போம் வாருங்கள். இடம்: மனிதவுரிமை சதுக்கம், (Metro: Trocadero Ligne: 6/9) காலம்: செவ்வாய் 12-02-2013 மாலை 3 மணிக்கு (15h00) தொடர்பு : mte.france@gmail.com / 06 52 72 58 67

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

மீண்டும் சாலமோன் தீவுகளில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமோன் தீவுகளில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 அலகுகளாக இது பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சாலமோன் தீவுகளில் கடந்த 7ம் திகதி சாண்டா குரூஷ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டரில் 8 அலகுகளாக இது பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயினர். 13 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உணரப்பட்ட சேத விவரம் தெரியவில்லை. இதனிடையே இன்று கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது

நாய்களுக்கு மைக்ரோசிப்: அரசு அதிரடி உத்தரவு


பிரிட்டனில் உள்ள அனைத்து நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என அரசு திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் நாய்களை செல்லபிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நாய்கள் கடித்து பலர் உயிரிழக்கின்றனர். இதற்கிடையே நாய்கள் அதிகளவு திருட்டு போகின்றன. எனவே எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாய்களின் கழுத்துபட்டையில் மைக்ரோசிப் பொருத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நாயின் உரிமையாளர் பற்றிய முழுவிபரங்கள் இருக்கும். இதன் மூலம் தொலைந்து போன நாயின் உரிமையாளர் பற்றிய விபரம் எளிதில் தெரியவரும். மேலும் நாய்கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாகவும் இருக்கும். குறிப்பிட்ட திகதிக்குள் தங்கள் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

சனி, 9 பிப்ரவரி, 2013

செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள்

 
ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம். செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாகாணொளி,சீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது,[]

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சாலமன் தீவில் மீண்டும் நிலநடுக்கம்


சுனாமியின் கோரத் தாண்டவத்தில் சாலமன் தீவில் ஐந்து கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கம் லடா என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இதேபோன்று நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 9 பேர் பலியாகி உள்ளனர். 8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. இந்நிலையில் சான்டாகுருஸ் தீவில் உள்ள ஐந்து கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது தற்போது தெரியவந்துள்ளது

வியாழன், 7 பிப்ரவரி, 2013

2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே,,,

 
பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும் எஸ்பெரன்ஸ் பிசிமான மற்றும் பிரிடிலே பிசிமான என்ற தம்பதியரின் பாலகனே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இதே பெற்றோரின் 8 வயது சிறுவன் வளர்ப்பு வீட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தம்பதியர் தமது நான்கு பிள்ளைகளுடன் நோர்வேயின் டர்மென் இல் வசித்து வந்த சந்தர்ப்பத்தில் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவர்களது 13,11,08 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளை நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமாக எடுத்து சென்றுள்ளது. இது இவ்வாறிருக்க இந்த தம்பதியருக்கு 05 ஆவதாக பிறந்த குழந்தையையும் இரண்டு நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் இருந்தவாறே தாயிடமிருற்து பலவந்தமாக பறித்து செல்லப்பட்ட துயரச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தற்போது தமது ஐந்து பிள்ளைகளையும் நோர்வே சிறுவர் காப்பகத்திடம் பறிகொடுத்து தவிர்ப்பதாகவும் தற்போது சுமார் நான்கு மாதங்களே ஆன தமது ஐந்தாவது குழந்தையை நினைத்து மனமொடிந்து போயிருப்பதாகவும் குழந்தையின் தாயாரான பிடிலா பிசிமான தெரிவித்துள்ளார். இந்நிலையிலிருந்து எங்களது மனோநிலை எவ்வாறு இருக்கும் என்பதை மனிதாபிமானிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அந்தப் பெற்றோர் கூறியுள்ளனர். இதே நோர்வே காப்பகத்தில் கவர்ந்து செல்லப்பட்ட தமது 8 வயது மகன் பாலியல் துன்புறுத்த்களுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் தமது குழந்தைகளை மீட்டுத்தறுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும்

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை". பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல். சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்

துனிசியாவின் எதிர்கட்சி தலைவர் படுகொலை

மத்திய கிழக்கு நாடான துனிசியாவின் தலைநகர் டுனிஸ்ஸில் நேற்று, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சொக்ரி பெலாயிட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துனிசியாவின் இடதுசாரி ஜனநாயக தேசப்பற்று இயக்கத்தின் செயலாளரான இவர், தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. துனீசியாவில் முன்னால் ஜனாதிபதி பென் அலி என்பவர் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியிறக்கப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை இதுவாகும். இச்சம்பவத்தையடுத்து துனீசிய தற்போதைய ஜனாதிபதி மொன்செஃப் மார்ஷௌக்கி தனது பிரான்ஸுக்கான குறுகிய கால விஜயத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார்.மேலும் எகிப்துக்குச் செல்லவிருந்த தனது பயணத்தையும் கைவிட்டுள்ளார்

புதன், 6 பிப்ரவரி, 2013

8 மாதக் குழந்தை டெங்கினால் மரணம்,,,,

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அஷ்ஷ_ஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத் என்ற 8 மாதக் குழந்தை ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 8மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது ஜனாஸா இன்று காத்தான்குடியில்; நல்லடக்கம் இன்று 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும். பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான தூரத்துக்கு சமமானது . இந்த பனிப்பொழிவால் விமானப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் 155 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் பிரதமரின் விமானம் உள்ளிட்ட 56 விமானங்கள் வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார். இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அட்டவணைப்படி ஜனாதிபதியின் பயணம் அமையும் என்று இலங்கை அரச தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் விசா பெற முயன்ற இலங்கையர் இருவர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாடு, புதுவையில் பிரெஞ்சு தூதரகத்தில் பொய்யான பாஸ்போர்ட்டை அளித்து இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வீசா அனுமதி கேட்பதாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இலங்கையைச் சேர்ந்த ஆண் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்ததாகவும், அந்தப் பெண் திருச்சியில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும், தங்களது உண்மையான பெயர்களை மறைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல விசா பெற முயற்சித்ததாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று புதுவை மாநில பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ். ராமராஜு தெரிவித்தார்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்தமைக்கான தடயங்கள்

கிழக்கில் ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்த தடயங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுக்கள தற்போதும் காணப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க தற்போது கிழக்கின் பல பாகங்களுக்கும் தெற்கிலுள்ள குழு ஒன்று இரகசியமான முறையில் ஆதிகால தடயங்களை கண்டு கொள்வதற்காக தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்கியுள்ளது. அதற்கு தமிழினத்தின் சிலரும் உறுதுணையாக அமைகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். தழிழர்கள் வாழ்ந்து வந்த பாரிம்பரிய பண்டைய இடங்களில் ஆதிவாசிகளான தமது பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதனை ஆதாரம் காட்டி பின்னர் அவ்விடங்களை பொது இடமாக பிரகடனப்படுத்தி அதனை அரசுடமையாக்கி பின்னர் பெரும்பான்மை இனமக்களை குடியேற்றுவதே இதன்நோக்கமாகும் என இப்பகுதி பழம்பெரும் தமிழ் மூதாதையர்களும் ஆய்வாளர்களும் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள உன்னிச்சை, வெல்லாவெளி, பட்டிப்பளை.வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களில் இந்நடவடிக்கைகளை அவதானிக்க முடிகின்றது. இவற்றுள் சில இடங்களை இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு அடையாளம் காட்டிக் கொடுக்கிள்றார்கள் என்பதும் புலனாகின்றது {புகைப்படங்கள்]