சுனாமியின் கோரத் தாண்டவத்தில் சாலமன் தீவில் ஐந்து கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கம் லடா என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.
இதேபோன்று நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 9 பேர் பலியாகி உள்ளனர்.
8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின.
இந்நிலையில் சான்டாகுருஸ் தீவில் உள்ள ஐந்து கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது தற்போது தெரியவந்துள்ளது
0 comments:
கருத்துரையிடுக