கனடாவில் நடந்த ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள வந்த பிரித்தானிய கடற்படை மாலுமிகள் நால்வர் மீது பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோவ ஸ்கோசிய கனடிய கடற்படை போக்குவரத்து மையமான Shearwater-ல் கனடிய படையினருக்கும், பிரித்தானிய கடற்படை மாலுமிகளுக்கும் இடையே ஹாக்கி போட்டி நடந்துள்ளது.
இந்த போட்டியின் போது பிரிட்டிஷ் கடற்படை மாலுமிகள் கிறேய்க் ஸ்ரோனர், டரன் ஸ்மெலி, ஜோசுவா வின்போ மற்றும் சிமோன் றட்வோட் ஆகிய 4 பேர் மீது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்றே தளத்தில் உள்ள ராணுவ பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண் கனடிய படைகளின் உறுப்பினர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நால்வரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை றோயல் கடற்படை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்வதாக தெரிவித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் சட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் மேலதிக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கமுடியாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நால்வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.