siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 5 ஜூலை, 2013

கற்பழிக்கப்படுவதை பெண்களே விரும்புகிறார்கள்:

தாங்கள் கற்பழிக்கப்படுவதை சில பெண்களே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள இஸ்ரேல் நீதிபதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல் அவிவ் மாவட்ட நீதிபதி நிஸ்ஸின் யஷயே என்பவர் தான் இப்படி கருத்து கூறியுள்ளார். கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த யஷயே கருத்து தெரிவிக்கையில், சில பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தாங்கள் கற்பழிக்கப்படுவது பிடித்திருக்கிறது, அதை விரும்பவும் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....

குப்பை தொட்டியில் ஏழு மனித தலைகள்

மெக்சிகோவில் குப்பை தொட்டி ஒன்றில் ஏழு மனித தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சகோல்கோ நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில், சுமார் ஏழு தலைகள் மற்றும் சில உடல் உறுப்புகள் அடைத்து வைக்கப்பட்ட குப்பை கவர் கிடைத்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார், இந்த தலைகள் யாருடையது, எதற்காக இங்கு வந்து...

அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு

எகிப்தில் நேற்று திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கு அதிபராகக் கடமையாற்றிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த் முஹம்மது மோர்ஸி பதவியிறக்கப் பட்டதுடன் அவர் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டு இடைக்கால அதிபராக மூத்த நீதிபதி மன்சூர் நியமிக்கப் பட்டிருந்தார்.   எகிப்தில் கடந்த சில நாட்களாக மோர்ஸிக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதன்கிழமை ஆர்ப்ப்பாட்டத்தின் போது போலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததில் 30...

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 50 பேர் பலி:12 000 பேர்

  இந்தியாவின் உத்தரகண்டைப் போலவே கடந்த சில 3 வாரங்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலும் மண்சரிவுகளிலும் சிக்கி 50 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 12 000 பொது மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.   மேலும் 19 பொதுமக்களைக் காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மொன்சூன் பருவமழை சீசனான இப்போதைய...

ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலில் பாகிஸ்தானில்

  பாகிஸ்தான் அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களான டிரோன் தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.   சமீபத்திய தாக்குதலாக நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடியினர் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களையும் வாகனங்களையும் குறிவைத்து நிகழ்த்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையான சிஐஏ இனால்...

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம்??

சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்பு படிக்கும்  இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களை  விடுமுறை நாட்களில் இலங்கைக்கு வருவதற்கான விமானப் பயணச் சீட்டையும் விடுமுறை முடிந்து மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கான விமானச் சீட்டையும் பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று மாத காலம் ஏமாற்றிய விமானச்சீட்டு விற்பனையாளர் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.  சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்புக்காகச் சென்ற ஆறு மாணவர்களுக்கு...

ஒட்டு கேட்பு கருவி: அதிர்ச்சி தகவல் வெளியானது

லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மற்ற நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என ஸ்னோடென் வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருக்கிறது. இந்தக் கருவியை செய்தியாளர்களிடம் ஈக்வடார் வெளியுறவு...