siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஒட்டு கேட்பு கருவி: அதிர்ச்சி தகவல் வெளியானது


லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என ஸ்னோடென் வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருக்கிறது. இந்தக் கருவியை செய்தியாளர்களிடம் ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதே ஈக்வடார் தூதரகத்தில்தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே கடந்த ஓராண்டு காலமாக தஞ்சம் புகுந்து இருக்கிறார். அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவதே இல்லை.
அப்படி வெளியே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் அதே தூதரகத்தில் தான் இத்தகைய ஒட்டு கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக