siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலில் பாகிஸ்தானில்

 
பாகிஸ்தான் அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களான டிரோன் தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
 
 சமீபத்திய தாக்குதலாக நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடியினர் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களையும் வாகனங்களையும் குறிவைத்து நிகழ்த்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையான சிஐஏ இனால் இயக்கப் பட்ட ஆளில்லா டிரோன் விமானம் ஆப்கான் எல்லையிலுள்ள வடக்கு வரிஷிஸ்டான் பழங்குடியினர் பகுதியான மிரான்ஷாஹ் இல் தீவிரவாதிகளின் வாகனத்தைக் குறி வைத்து 4 ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் இறந்தவர்களின் அடையாளம் இன்னமும் உறுதிப்படுத்தப் படாத நிலையில் குறித்த இடம் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் அதிகம் வசிக்கும் இடம் எனக் கூறப்படுகின்றது. மேலும் நேற்றைய தாக்குதல் இந்த இரு மாதங்களில் நிகழ்த்தப் பட்ட 2 ஆவது தாக்குதலாகும்.

 கடந்த மாதம் வடக்கு வஷிரிஸ்டானில் நிகழ்த்தப் பட்ட டிரோன் தாக்குதலில் 7 ஆயுததாரிகள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் இந்த சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் பாகிஸ்தான் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆல் கடுமையாகக் கண்டிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பல அப்பாவிப் பொது மக்கள் கொல்லப் படக் காரணமான அமெரிக்காவின் இந்த சட்ட விரோத டிரோன் தாக்குதல்களை தான் தடுத்து நிறுத்துவேன் எனத் தேர்தல் சமயத்தில் நவாஸ் ஷெரீஃப் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

0 comments:

கருத்துரையிடுக