எகிப்தில் நேற்று திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கு அதிபராகக் கடமையாற்றிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த் முஹம்மது மோர்ஸி பதவியிறக்கப் பட்டதுடன் அவர் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டு இடைக்கால அதிபராக மூத்த நீதிபதி மன்சூர் நியமிக்கப் பட்டிருந்தார்.
எகிப்தில் கடந்த சில நாட்களாக மோர்ஸிக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
புதன்கிழமை ஆர்ப்ப்பாட்டத்தின் போது போலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததில் 30 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோர்ஸி பதவியிறக்கப் பட்டு வீட்டுக்காவலில் வைக்கப் பட்டதால் அங்கு ஜனநாயக முறைப்படி அரசு அமையவுள்ள காரணத்தால் எகிப்து பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாற்றம் குறித்து ஜேர்மனி கருத்துத் தெரிவிக்கையில் எகிப்தில் ஜனநாயகம் நிலவுவதற்காக அதிக இழப்புடன் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி இதுவெனக் கூறியுள்ளது.
இதேவேளை சக நாடுகளுடன் இறுக்கமான அரசியல் கொள்கைகளையும் நட்புறவையும் கொண்டிருந்த அதிபர் மோர்ஸி பதவியிறக்கப் பட்டது உலகளாவிய ரீதியில் சாதகமான பயன்களையே ஏற்படுத்தக் கூடியது என்று அரசியல் அவதானிகள் கூறும் வேளை தற்போது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் வியாழக்கிழமை மோர்ஸி பதவியிறக்கப் பட்டதை வரவேற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளன.
எகிப்தில் இதற்கு முன்னர் இந்தளவு மிகப் பெரிய மக்கள் எழுச்சி நிகழ்ந்ததோ அல்லது மக்களின் எதிர்ப்பினால் அதிபர் பதவியிறக்கப் பட்டதோ நிகழ்ந்தது கிடையாது என்பதால் தற்போது அங்குள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் விழிப்புடன் உள்ளன. அதாவது இக்கட்சிகள் அல்லது இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயக ரீதியாக அங்கு ஆட்சிக்கு வரக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளன என்பதை இப்புரட்சி மூலம் உணர்ந்துள்ளன.
இதேவேளை இதுவரை மோர்ஸியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்த்திய எகிப்து மக்கள் வியாழக்கிழமை கெய்ரோவிலுள்ள டாஹ்ரிர் சதுக்கத்தில் அமைதியான முறையில் அவர் பதவி நீக்கப் பட்டு தேர்தல் நடைபெறவுள்ள சந்தோசத்தை அமைதியான முறையில் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் எழுப்பியும் கொண்டாடியுள்ளனர்
0 comments:
கருத்துரையிடுக