siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 ஜூலை, 2013

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 50 பேர் பலி:12 000 பேர்


 
இந்தியாவின் உத்தரகண்டைப் போலவே கடந்த சில 3 வாரங்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலும் மண்சரிவுகளிலும் சிக்கி 50 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 12 000 பொது மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.
 
 மேலும் 19 பொதுமக்களைக் காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 மொன்சூன் பருவமழை சீசனான இப்போதைய காலநிலை காரணமாக நேபாளின் தெற்கு பீடபூமிகளும் மேற்கு மலைப் பிரதேசங்களும் முக்கியமாக இவ்வனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 900 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

 மேலும் பண்ணைத் தொழிலுக்காக வளர்க்கப் பட்ட 1000 விலங்குளும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளன. இந்நிலையில் நேபாள அரசு நிவாரணப் பணிகளுக்கென 9.2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக