This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 6 ஆகஸ்ட், 2012
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை
சடலத்துக்கருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாகவும் முருகேசு சிவராசா (வயது 45) கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்தவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த நபர் தொழில் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்த இவரைக் காணவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது, அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
விபத்தில் கணவனை பறிகொடுத்த பெண் மறுமணம் செய்தாலும்இழப்பீடு கொடுக்க வேண்டும்
2012-08-06
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்போனா (33). இவரது கணவர், 1998ல் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, கார் மோதி இறந்தார். ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு, நெல்போனாவும், அவரது மாமனார் சீனிவாஸ் டைட்ஸ் இருவரும், நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நெல்போனாவிற்கு ரூ.4 லட்சம், மாமனாருக்கு ரூ.1.28 லட்சமும் இழப்பீடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 2000ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனம், ஐகோர்ட் கிளைரூ.ல் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. மனுவில், Ôவிபத்துக்கு மனுதாரரின் கணவர் தான் காரணம். கார் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடைபெறவில்லை. கீழ்கோர்ட்டில் இழப்பீடு தவறுதலாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கணவர் இறந்ததும் மறுமணம் செய்துள்ளார். இதனால், இழப்பீடு வழங்க முடியாதுÕ என கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை பொறுத்தவரை, கார் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமான டிரைவர், விபத்துக்கு தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு கோர்ட்டில் அபராதம் செலுத்தியுள்ளார்.இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்தது சரிரூ.ல்லை என்று கூறியுள்ளனர். மனுதாரரின் கணவர் 38 வயதில் இறந் துள்ளார். நன்றாக படித்துள்ளார். சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் மாதம் ரூ.4 ஆரூ.ரம் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால், மாதம் ரூ.3 ஆரூ.ரம் சம்பளம் வாங்குவதாக கருதி, இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது சரியானதே.
மறுமணம் செய்தார் என்ற காரணத்திற்காக, விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது. இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசாக, அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். மனுதாரருக்கு கீழ்கோர்ட் உத்தரவிட்டபடி, ரூ.5 லட்சத்து 28 ஆரூ.ரம் இழப்பீடு தொகையை, 8 வாரத்தில் மனுத்தாக்கல் செய்த நாளிலிருந்து 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
முத்து நகரம் – சினிமா முன்னோட்டம்
06.08.2012.
எல்.ஏ. சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் முத்து நகரம். இதில் நாயகர்களாக சதீஷ், ரவி, திருப்பதி, தீப்பெட்டி கணேசன், அரசு ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாக அஸ்ரிக் பானு நடிக்கிறார். காதல் தண்டபாணி, நந்தா சரவணன், கஞ்சாகருப்பு, முத்துக்காளை, காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன் செவ்வாளை, பூவிதா, மது ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒட்டப்பிடாரம் கே.திருப்பதி இயக்குகிறார். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஐந்து இளைஞர்கள் மனம் வெறுத்து ஒரு குற்றத்தை செய்து பார்ப்போமே என இறங்குகின்றனர் ஆனால் அங்கும் விதி வேறுவிதமாக அவர்கள் என்ன மாதிரி பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதும் அதில் இருந்து விடுபட என்னவெல்லாம் இழந்தார்கள் என்பதும் கதை. முழு படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நாற்பது நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
ஒளிப்பதிவு: சூரியன், இசை: ஜெயபிரகாஷ், பாடல்: ஜெயமுரசு, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, நடனம்: பாலகுமார் ரேவதி, ஸ்டண்ட்: பயர் கார்த்தி.
ரீ என்ட்ரி பற்றி கூறுகிறார் ஐஸ்வர்யா ராய்
06.08.2012.
இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கணவர் – குழந்தையோடு சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.
புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.
வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்,” என்றார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கணவர் – குழந்தையோடு சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.
புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.
வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்,” என்றார்.
நாத்திக கமல் ..!பத்மநாப சுவாமி கோவிலில் ஆத்திக மகள் ..!
திடீரென ஆன்மிகத்தில் தீவிரம் காட்டும் ஸ்ருதி ஹாசன், கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். நாத்திகத்தில் தீவிர நாட்டம் கொண்டவர் கமல்ஹாசன்.
ஆனால் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நேர் எதிராக மாறிவிட்டார். பாலிவுட்டில் ‘லக் படத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசனுக்கு அப்படம் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாதவர் என்று பரப்பிவிட்டனர். இந்நிலையில் தமிழில் ‘7ஆம் அறிவுÕ படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கில் அவர் நடித்த ‘கப்பர்சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதி ஹாசன் தானும் ராசியான நடிகை என்று பெயர் வாங்கிவிட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தெலுங்கில் கைநிறைய படங்களில் நடிப்பதுடன் இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதி ஹாசன், கேரளா சென்றார். அங்குள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இதுபற்றி அவர் டுவிட்டர் பக்கத்தில்,
‘கேரளாவின் எழில் என்னை கவர்ந்தது. ஆத்ம ரீதியான தொடர்பு இங்கு எனக்கு கிடைத்தது. பத்மநாப சுவாமி கோயில் சென்று தரிசனம் செய்தேன். அமைதியையும், ஆசிர்வாதத்தையும் உணர்ந்தேன்Õ என்று குறிப்பிட்டுள்ளார்.
காலத்தை வென்று நிற்கும் கிராமியக்கலை காளியாட்டம்
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் காளி வேடமிட்டு ஆடக்கூடிய சிவபாலனை சந்தித்து காளியாட்டம் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். காளியாட்டம் என்பது வழிபாடாகவோ அல்லது பொழுதுபோக்கினை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியிருக்கலாம் இதற்கு காளிவேடம், காளி திருநடனம், காளி வீதி உலா என பிற பெயர்களும் உண்டு" என்கிறார். கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் தவறாமல் இடம்பெறுவது மகாபாரதக் கதை. இதை வில்லுப்பாட்டு மூலமாகவோ கனியன்கூத்து மூலமாகவோ அந்தந்த ஊர் வழக்கப்படி செய்துவருவர். இந்தக் கதை நிகழ்த்தப்படும்போது அர்ஜூனன் மகனாகிய அரவானைக் காளிக்குப் பலி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கும். அந்தப் பலிகொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஆண் ஒருவர் காளி வேடமிட்டு ஆடிக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார். பார்ப்பதற்கு உண்மையான காளி தேவியைப் போன்றே காட்சியளிக்கும் அவர், தலையில் கிரீடம், கண்களில் வெள்ளியிலான கண்மலர், கழுத்தில் நீண்ட மாலை, கையில் உடுக்கை, கத்தி, சங்கு போன்றவற்றுடன் தலைவிரி கோலத்துடன் செந்நிற முகத்தில் வாய்க்கு வெளியே வெண்ணிறக் கோரைப் பற்கள்நீட்டிக் கொண்டிருக்க தொங்கிய நாக்கும், பெருத்த மார்போடும், சிவப்பு அல்லது பச்சைப் பட்டுச் சேலை உடுத்திய காளிதேவியாக வருவார். இக் காளி தேவியை ஒருவர் கயிற்றால் இடுப்பில் கட்டிப் பின்புறமாகப் பிடித்துவருவார். காளிக்கு முன்னர் கத்திச் சண்டையும் சிலம்பாட்டமும் நடைபெறும். இந்தக் காளியாட்டத்தில் பச்சைக் காளி, சிவப்புக் காளி என இரு பிரிவுகளும் உண்டு. கிராமத்தில் பேய் பிடித்து ஆட்டும் பெண்கள் காளிதேவியாக வலம்வரும் இவரை வணங்குவர். அப் பெண்களைத் தன் கையில் வைத்திருக்கும் துடைப்பத்தால் அடிப்பாள் காளிதேவி. இவ்வாறு அடிக்கும்போது பெண்களுக்குப் பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என்பது மரபு. ஆனால் இன்றைய கம்பியூட்டர் காலத்தில் அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது" என்கிறார் சிவபாலன். ‘இன்று காளியாட்டம் என்பது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு காலத்தில் காளியாட்டம் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதாவது காளியாட்டம் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவத்தை மண்ணால் படுத்திருப்பது போல் செய்வர். படுத்திருக்கும் அரவான் உருவத்திற்குப் பக்கத்தில் மிகப்பெரிய காளிதேவியின் உருவமும் செய்யப்படும். பொதுவாக கோயிலின் முன்பகுதியிலேயே இந்த உருவங்கள் செய்து வைக்கப்படும். கோவில் பூஜை தொடங்கும்போது காளிதேவியின் உருவத்திற்கு முன்பாக கோழி ஒன்றைப் பலி கொடுப்பர். பின்னர் அரவான் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து அதைத் துண்டாக வெட்டி எறிவர். கோவில் பூசாரி துரோபதையின் வேடமிட்டு அரவானைச் சுற்றிவந்து ஒப்பாரி வைத்து பாட்டுப்பாடி மார்பில் அடித்துக்கொண்டே அழுவார். இதுதான் பண்டைய தமிழ் கிராமத்துக் கோவில்களில் முக்கிய அங்கம் வகித்தது. அதன்பிறகு நாளடைவில் மெல்ல மெல்ல இந் நிகழ்ச்சி காளிவேடமிட்டு ஆடும் நிகழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும்’ என முந்தைய கால காளியாட்டத்தைப் பற்றிக்கூறும் சிவபாலன் பரத நாட்டியத்தை முறையாகக் கற்றவர். சினிமாவிற்குப் பாட்டெழுதி மீண்டும் ஒரு கண்ணதாசனாக மாறிவிட வேண்டும் என்பதுதான் சிவபாலனின் சின்னவயது ஆசை. அதற்காகவே கம்பனையும், வள்ளுவனையும், சித்தர்களின் பாடல்களையும் நூலகங்களில் தேடிப்போய்ப் படித்து தன் கவித்திறனை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் விதி வலியது. எல்லாமே தலைகீழாகிப்போனது. இன்று காளி வேடமிட்டு திருவிழாக்களில் ஆடிக் கொண்டிருக்கிறார். பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்ட சிவபாலன் காளியாட்டத்திற்கு எப்படிமாறினார்? அவரிடமே கேட்டோம். ‘ஒருமுறை நண்பர் ஒருவரிடம் கடன் வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது, ‘என்னுடன் வா...சின்ன வேலை ஒன்று தருகிறேன்... அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்’ என்றார். அந்த நண்பரின் பெயர் ஜானகிராமன். அவரின் தொழில்தான் கோவில்களில் காளி வேடமிட்டு ஆடுவது. அவர் எமக்குக் கொடுத்த வேலை, எந்த ஊருக்கு அவர் காளிவேஷம் போடச் செல்கிறாரோ அவருடன் நானும் செல்லவேண்டும். காளி வேஷம் போடுவதற்குத் தேவையான பொருட்களை மூன்று பைகளில் சுமந்து சென்று வேஷம் போடும்போது அவருக்கு உதவியாக இருக்கவேண்டும். முதன் முறையாக இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கிராமத்தில் இரவு நேரத்திருவிழாவிற்கு எம்மை அழைத்துச் சென்றார். மறைவான இடத்தில் வைத்து காளி வேஷத்தைப் போட ஆரம்பித்தார். அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொடுத்தேன். அந்த வேஷத்தைப் போட்டு முடிக்கவே மூன்றுமணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று. அன்றைய தினம் நடு இரவில் அவர் காளிவேஷமிட்டு ஊர்கோவிலில் ஆடியதைப் பார்த்த போது, நானே பயந்து போனேன். பணத்தேவையின் காரணமாக அவரோடு பல மாதங்கள் உதவிக்குச் சென்றேன். இதனால் அவர் எப்படி வேஷம் போடுகிறார், எப்படி ஆடுகிறார் என்பதை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் அவருக்கு உடல்நலக் குறைவு. அன்றைய தினம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கு காளிவேஷமிட்டு ஆடுவதற்கு முன்பணம் வாங்கியிருந்தார். அவரால் இயலவில்லை. சிவபாலா... நான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன்... போய் ஆடாவிட்டால் ஊர் மக்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்... என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்க, ‘நான் போய் ஆடிவிட்டு வரட்டுமா?‘ என்று பதிலுக்கு நான் சொல்ல, அவரும் துணிச்சலாகச் சம்மதித்தார். பரதம் கற்றிருந்த எனக்கு காளிவேஷமிட்டு ஆடும்போது பரத நாட்டியத்தின் நாட்டிய பாவனைகள் எளிதாகக் கைகொடுத்தன. அன்றைய தினம் எமது ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. நான்தான் காளிவேஷமிட்டு ஆடுகிறேன் என்பது தெரியாமலேயே நான் கடன் வாங்கியிருந்த பலரும் எனது ஆட்டத்தை ரசித்தனர். அவர்களோடு எமது தந்தையும் நின்றிருந்தார். இப்படித்தான் எனது கவிஞர் கனவு காளியாட்டமாக மாறிப்போனது" என்றபடியே காளிவேடம் போடுவது எப்படி என்பதை நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார். வேஷம் போடுவதற்கு முன்னர் காளியை நினைத்து அரைமணி நேரம் தியானம் செய்ய ஆரம்பித்தவர், அதன்பிறகு செந்தூரத்தால் ஆன பச்சை வண்ணத்தை உடலெங்கும் பூச ஆரம்பித்து, படிப்படியாக காளிதேவியாக மாறுவதற்கு மூன்றரை மணிநேரம் ஆயிற்று. உண்மையாகவே மேலுலகில் இருந்து பத்திரகாளியே நம் முன் காட்சி தந்ததைப் போல் அவதாரம் எடுத்திருந்த சிவபாலனுக்கு தேங்காய், பழம் படைத்து கற்பூர ஆரத்தி எடுக்கலாம் போலிருந்தது எமது மன நிலை. இந்தக் காளிவேடம் தஞ்சை மாவட்டப் பகுதிகளில்தான் மிகவும் பிரசித்தம். மரத்தில் செய்யப்பட்ட ஆறு கைகள், அவற்றில் வாள், சூலாயுதம் ஏந்தியபடியே கோவில் திருவிழாக்களில் ஆடுவது மகத்தான விடயமும்கூட. பொதுவாக காளிவேடம் போடுபவர்கள் எந்தக் கோவிலுக்காக காளிவேடம் போடவேண்டுமோ, அந்தக் கோவிலுக்கு காப்பு கட்டிய நாள்முதல் விழா முடியும் வரை விரதம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். நம் தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் காளிதேவி வேடமிட்டு ஆடும் விழா நடைபெறுகிறது. சென்னையில் சிவபாலன் மட்டுமே தற்போது காளி வேடமிட்டு ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது |
ஜி.வி.பிரகாஷின் 25வது திரைப்படம்
Last Updated :
06.08.2012.
தமிழ் திரையுலகிற்கு வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பல்வேறு வெற்றிகளை தந்துள்ளார். பொல்லாதவன், குசேலன், காளை, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இசையில் வந்தவை. இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவர் பாடுவதிலும் வல்லமை படைத்தவர். ஜென்டில் மேன், அந்நியன், ஆடுகளம் போன்ற படங்களில் இவர் பாடவும் செய்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமைபடைத்த ஜி.வி.பிரகாஷ் குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தாண்டவம் திரைப்படம் இவரது இசையில் உருவாகும் 25வது திரைப்படம். மொத்த எட்டு பாடல்களை கொண்ட இந்த திரைப்படத்தின் ஆடியோ வரும் 15ம் தேதி வெளியிடப்படுகிறது.
குடிச்சுப்போட்டு என்னா ஒரு வில்லத்தனம் (வீடியோ இணைப்பு)
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மார்ச் 2013 ல் மீண்டும் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும்!
திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012,
10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான சேவை கேட்விக் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு மாலைதீவு வழியாக இருந்து கொழும்பு விமானநிலையத்தை வந்தடையும் எனவும், வாரத்தில் மூன்று முறை செயல்படும் எனவும், பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் (DGCA) HMC Nimalsiri கூறினார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்க அதிகாரிகள் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
தற்போது மட்டுமே இலங்கை ஏர்லைன்ஸ் விமானசேவை லண்டனுக்கு ஒரு வாரத்தில் ஏழு முறை செயல்படுகிறது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விமான சேவைக்கு Hayleys நிறுவனம் கொழும்பு முகவராக செயற்படவுள்ளது.
இந்த சேவைக்கான ஒப்பந்தம் டிசம்பர் 2012 அல்லது ஜனவரி 2013 மேற்கொள்ளப்படுமென விமான போக்குவரத்து இயக்குனர் ரொமேஷ் டேவிட் கூறினார்.
இந்தச் சேவை ஆரம்பமாகவுள்ளதால் மேற்கத்தைய சுற்றுலாப பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்க அதிகாரிகள் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
தற்போது மட்டுமே இலங்கை ஏர்லைன்ஸ் விமானசேவை லண்டனுக்கு ஒரு வாரத்தில் ஏழு முறை செயல்படுகிறது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விமான சேவைக்கு Hayleys நிறுவனம் கொழும்பு முகவராக செயற்படவுள்ளது.
இந்த சேவைக்கான ஒப்பந்தம் டிசம்பர் 2012 அல்லது ஜனவரி 2013 மேற்கொள்ளப்படுமென விமான போக்குவரத்து இயக்குனர் ரொமேஷ் டேவிட் கூறினார்.
இந்தச் சேவை ஆரம்பமாகவுள்ளதால் மேற்கத்தைய சுற்றுலாப பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012,
திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் குறித்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான வினோத் (வயது-12), கௌதம் (வயது-7) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் சடலங்கள் காணப்படுவதால் குறிப்பிட்ட மூவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டாளர்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான வினோத் (வயது-12), கௌதம் (வயது-7) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் சடலங்கள் காணப்படுவதால் குறிப்பிட்ட மூவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டாளர்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கழிவு ஆயில் சாலையில் கொட்டி 5 கார்கள் விபத்து: 15 பேர் காயம்
Monday
2012-08-06
மார்த்தாண்டம் : குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை முந்திரி ஆலை கழிவு ஆயில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மார்த்தாண்டம் சந்திப்பில் சென்ற போது திடீரென லாரியில் இருந்த கழிவு ஆயில் சாலையில் கொட்டியது. அப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் அவ்வழியே பைக்கில் வந்த களியக்காவிளை பகுதியைச் மீரான், ராஜேஷ் உள்பட 15க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
அவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நடந்து சென்றவர்களில் சிலரும் வழுக்கி விழுந்தனர். 5க்கும் மேற்பட்ட கார்கள் பிரேக் பிடிக்காமல் சாலையோரம் மோதி நின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை தொழுகை முடிந்து வந்தவர்கள் சாலையில் ஆயில் கொட்டிக் கிடப்பதை பார்த்து வாகனங்களை எச்சரித்தனர். போலீசார் விரைந்து வந்து வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாலையை சீரமைத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)