06.08.2012.
திடீரென ஆன்மிகத்தில் தீவிரம் காட்டும் ஸ்ருதி ஹாசன், கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். நாத்திகத்தில் தீவிர நாட்டம் கொண்டவர் கமல்ஹாசன்.
ஆனால் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நேர் எதிராக மாறிவிட்டார். பாலிவுட்டில் ‘லக் படத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசனுக்கு அப்படம் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாதவர் என்று பரப்பிவிட்டனர். இந்நிலையில் தமிழில் ‘7ஆம் அறிவுÕ படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கில் அவர் நடித்த ‘கப்பர்சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதி ஹாசன் தானும் ராசியான நடிகை என்று பெயர் வாங்கிவிட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தெலுங்கில் கைநிறைய படங்களில் நடிப்பதுடன் இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதி ஹாசன், கேரளா சென்றார். அங்குள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இதுபற்றி அவர் டுவிட்டர் பக்கத்தில்,
‘கேரளாவின் எழில் என்னை கவர்ந்தது. ஆத்ம ரீதியான தொடர்பு இங்கு எனக்கு கிடைத்தது. பத்மநாப சுவாமி கோயில் சென்று தரிசனம் செய்தேன். அமைதியையும், ஆசிர்வாதத்தையும் உணர்ந்தேன்Õ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக