06.08.2012.
எல்.ஏ. சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் முத்து நகரம். இதில் நாயகர்களாக சதீஷ், ரவி, திருப்பதி, தீப்பெட்டி கணேசன், அரசு ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாக அஸ்ரிக் பானு நடிக்கிறார். காதல் தண்டபாணி, நந்தா சரவணன், கஞ்சாகருப்பு, முத்துக்காளை, காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன் செவ்வாளை, பூவிதா, மது ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒட்டப்பிடாரம் கே.திருப்பதி இயக்குகிறார். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஐந்து இளைஞர்கள் மனம் வெறுத்து ஒரு குற்றத்தை செய்து பார்ப்போமே என இறங்குகின்றனர் ஆனால் அங்கும் விதி வேறுவிதமாக அவர்கள் என்ன மாதிரி பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதும் அதில் இருந்து விடுபட என்னவெல்லாம் இழந்தார்கள் என்பதும் கதை. முழு படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நாற்பது நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
ஒளிப்பதிவு: சூரியன், இசை: ஜெயபிரகாஷ், பாடல்: ஜெயமுரசு, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, நடனம்: பாலகுமார் ரேவதி, ஸ்டண்ட்: பயர் கார்த்தி.
0 comments:
கருத்துரையிடுக