திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012,
10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான சேவை கேட்விக் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு மாலைதீவு வழியாக இருந்து கொழும்பு விமானநிலையத்தை வந்தடையும் எனவும், வாரத்தில் மூன்று முறை செயல்படும் எனவும், பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் (DGCA) HMC Nimalsiri கூறினார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்க அதிகாரிகள் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
தற்போது மட்டுமே இலங்கை ஏர்லைன்ஸ் விமானசேவை லண்டனுக்கு ஒரு வாரத்தில் ஏழு முறை செயல்படுகிறது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விமான சேவைக்கு Hayleys நிறுவனம் கொழும்பு முகவராக செயற்படவுள்ளது.
இந்த சேவைக்கான ஒப்பந்தம் டிசம்பர் 2012 அல்லது ஜனவரி 2013 மேற்கொள்ளப்படுமென விமான போக்குவரத்து இயக்குனர் ரொமேஷ் டேவிட் கூறினார்.
இந்தச் சேவை ஆரம்பமாகவுள்ளதால் மேற்கத்தைய சுற்றுலாப பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

0 comments:
கருத்துரையிடுக