siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை



06.08.2012.யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சடலத்துக்கருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாகவும் முருகேசு சிவராசா (வயது 45) கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்தவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


குறித்த நபர் தொழில் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்த இவரைக் காணவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது, அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக