siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஜி.வி.பிரகாஷின் 25வது திரைப்படம்



06.08.2012.
தமிழ் திரையுலகிற்கு வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பல்வேறு வெற்றிகளை தந்துள்ளார். பொல்லாதவன், குசேலன், காளை, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இசையில் வந்தவை. இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவர் பாடுவதிலும் வல்லமை படைத்தவர். ஜென்டில் மேன், அந்நியன், ஆடுகளம் போன்ற படங்களில் இவர் பாடவும் செய்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமைபடைத்த ஜி.வி.பிரகாஷ் குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தாண்டவம் திரைப்படம் இவரது இசையில் உருவாகும் 25வது திரைப்படம். மொத்த எட்டு பாடல்களை கொண்ட இந்த திரைப்படத்தின் ஆடியோ வரும் 15ம் தேதி வெளியிடப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக