மார்த்தாண்டம் : குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை முந்திரி ஆலை கழிவு ஆயில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மார்த்தாண்டம் சந்திப்பில் சென்ற போது திடீரென லாரியில் இருந்த கழிவு ஆயில் சாலையில் கொட்டியது. அப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் அவ்வழியே பைக்கில் வந்த களியக்காவிளை பகுதியைச் மீரான், ராஜேஷ் உள்பட 15க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
அவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நடந்து சென்றவர்களில் சிலரும் வழுக்கி விழுந்தனர். 5க்கும் மேற்பட்ட கார்கள் பிரேக் பிடிக்காமல் சாலையோரம் மோதி நின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை தொழுகை முடிந்து வந்தவர்கள் சாலையில் ஆயில் கொட்டிக் கிடப்பதை பார்த்து வாகனங்களை எச்சரித்தனர். போலீசார் விரைந்து வந்து வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாலையை சீரமைத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக