06.08.2012.இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கணவர் – குழந்தையோடு சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.
புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.
வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்,” என்றார்.

0 comments:
கருத்துரையிடுக