siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

எய்ட்ஸை ஒழிக்க 1 பில்லியன் டொலர் வழங்கும் பிரிட்டன்


 உலகளவில் கொடிய நோய்களான எய்ட்ஸ், மலேரியா, டி.பி போன்ற போன்ற நோய்களுக்காக அடுத்த மூன்று வருடங்களில் 1 பில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

சர்வதேச மேம்பாட்டு செயலாளர் ஜஸ்டின் கிரினிங் இந்த அறிவிப்பை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை ஒழிப்பு குறித்தான கூட்டத்தில் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு முடிவிற்குள் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்து குணப்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.
உலகளவில் இதற்காக 2014-2016ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டொலர் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் 1.65 பில்லியன் டொலர் தரவுள்ளது

மெக்ஸிகோ நிலச்சரிவு: 170 பேர் மரணம்?


மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார்.
தெற்கு மெக்ஸிகோ அருகே லா பின்டாட்டா என்ற இடத்தில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் அங்குள்ள ஒரு கிராமம் முற்றிலுமாக மண்ணில் புதைந்தது. இதில், 170 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது குறித்து குய்ரேரோவில் தமது அமைச்சர்களுடன் அதிபர் என்ரிக் சனிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

விமானத்தில் 1300 கிலோ கோகைன் போதைமருந்து மீட்பு


 
வெனிசுவேலாவின் காரகாசிலிருந்து பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் வந்த 30 பெட்டிகள் எந்தப் பயணியின் பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை.

சந்தேகப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் அவற்றைப் பிரித்து சோதனையிட்டபோது 1300 கிலோ எடையுள்ள சுத்தமான கோகைன் போதை மருந்துப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 200 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் அந்நாட்டு அதிகாரிகளால் நேற்றுதான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவல் வல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டு காவல்துறைகளும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றார்கள்.

கடத்தல் காரர்களை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவெலாவிலும் கோகைன் கடத்தல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கி வரும் போதை மருந்து தடுப்பு குழுவினருடன் அந்நாட்டின் பொது அமைச்சக வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட காலத்தில் அங்கு ஏதேனும் குற்ற நடவடிக்கை நடந்ததா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு


ஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது.

இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது.
இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினம் முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதன் மூலம் தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி அடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே என்று வலியுறுத்தினார். 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது என்றும் அப்போது அவர் கூறினார்.

சீனாவை தாக்கியது 'உசாகி' புயல்: 20 பேர் பலி


பிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தொடர்ந்து உசாகி புயல் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப்பகுதிகளை தாக்கியது.
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கிய இப்புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கில் முன்னெச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரி‌க்கை ஏற்றப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன