நாவலப்பிட்டி கலபட தோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கலபட நீர் வீழ்ச்சியில் நீராடும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.
ரகுநாத் திகாநாத் (வயது 18) சன்சன் நிக்ஷன் (வயது 18) ஆகியோர் நேற்று காலை திகாநாத் பாடசாலைக்குச் செல்வதாகவும் நிக்ஷன் நண்பனின் பிறந்த நாள் வைபவத்திற்குச் செல்வதாகவும் தெரிவித்து அவர்களின் ஏனைய நண்பர்கள் 9 பேருடன் நீர் வீழ்ச்சிக்குச் சென்று நீராடியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மாத்திரமே நீந்த தெரியும் என்பதால் மற்றவர்கள் கரையிலேயே குளித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நடுப்பகுதிக்கு நீதிச் சென்றுள்ளனர். ஆழம் கூடிய இடத்திற்குச் சென்ற இவர்களை திடீரென காணாததால் இவர்களின் பாதுகாவலரிடமும் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கும் உடன் அறிவித்தனர். பொலிஸார் வந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு சுமார் 11.00 மணியளவில் மாணவர்கள் இருவரின் சடலத்தை எடுத்துள்ளனர்.
நிக்ஷனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால் தனது மாமாவீட்டில் வசித்து வந்துள்ளார். திகாநாத் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார். இவர்கள் அட்டன் புனித பொஸ்கோஸ் அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் மாணவர்களாவர்