siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 1 டிசம்பர், 2012

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

 
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பாயின்ட்டி நோரியிலிருந்து பிராசா வில்லே நகருக்கு ஒரு தனியார் நிறுவன சரக்கு விமானம் வந்து கொண்டிருந்தது. பிராசா வில்லே அருகே இந்த விமானம் வந்தபோது, இதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதனால் விமானம் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவத்தல் 30 பேர் உடல் கருகி அதே இடத்தில் பலியாகினர். அவர்களில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தவிர குடியிருப்பு வாசிகளும் அடங்குவர்.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் வீடுகளும் இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை என்றாலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய

சீனாவில் 6 பெண்களை ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த ஆசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லீ ஹவோ(வயது 35) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை செய்து வந்தார்.
குடும்பத்தினருடன் வாழாமல் கடந்த 2009ம் ஆண்டு லுவோயாங் நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார் லீ.
வீட்டுக்குள் ரகசியமாக பாதாள அறை கட்டி, அங்கு 6 பெண்களை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பலரை அழைத்து வந்து விபசாரம் நடத்தியுள்ளார். இந்நிலையில் லீயின் பிடியில் இருந்து தப்பி வந்து இளம்பெண் ஒருவர் பொலிசில் தகவல் அளித்தார்.
உடனடியாக விரைந்து சென்ற பொலிசார், பாதாள அறையில் இருந்த பெண்களை மீட்டனர். இதுதெடார்பாக லீயை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
அவர் மீது கொலை, பலாத்காரம், விபசாரம், சட்டவிரோதமாக பெண்களை அடைத்து வைத்தது, பணத்துக்காக நிர்வாண காட்சிகளை வெளியிட்டது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து லுவோயாங் நீதிமன்றம், லீக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இளம்பெண்களை கடத்தி சென்று 2 மாதம் முதல் 21 மாதம் வரை பாதாள அறையில் லீ அடைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
அத்துடன் பலரையும் அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். தன் பிடியில் இருந்த பெண்களை நிர்வாணமாக்கி அதை ஓன்லைனில் வெளியிட்டு பணம் வசூலித்துள்ளார்.
மேலும் பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து வைத்துள்ளார். அவர்களில் 2 பெண்களை கொலை செய்துவிட்டார். அந்த கொலைக்கு மற்ற பெண்களும் உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியாக இருந்தது.
எனினும் அந்த சூழ்நிலையில் லீக்கு பயந்து அவர்கள் கொலைக்கு உதவியது தெரிய வந்தது. அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பணத்தை கொடுத்து பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகினார். இவர் நியூயார்க்கில் ஹோட்டல் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ட்ராஸ்கான், பின் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ட்ராஸ்கான் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பாலியல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி, குறித்த பெண்ணுக்கு பணம் கொடுக்க ஸ்ட்ராஸ்கான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஸ்ட்ராஸ்கானின் வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர்

ஜேர்மனியிடம் வழங்கியது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்

 
ஜெனீவாவில் உள்ள நெடுஞ்சாலைச் சங்கம் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் தகவல்களைக் கொண்ட ஆவணக்காப்பத்தை ஜேர்மனியிடம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது தொலைந்து போனவர்களையும் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களையும் பற்றி அறிய மக்கள் இந்த ஆவணக்காப்பத்தையே நாடினர். சர்வதேசத் தேடும் பணிக்கு(ITS) உதவிய இந்த ஆவணக்காப்பகம் 1943ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் இதன் மூலமாகப் பலகோடி குடும்பங்கள் தங்களின் காணாமல் போன உறவினர் குறித்து அறிந்து கொண்டனர், என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மாரெர் தெரிவித்தார்.
இந்த ஆவணக் காப்பகத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தகவல் அட்டைகள் உள்ளன. இவற்றில் 17.5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் குறித்த தவல்கள் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலோர் நாஜிப் படையினரால் கொல்லப்பட்ட யூதர்களே ஆவர்.
கடந்த ஐம்பதாண்டுகளாக தனது பொறுப்பில் வைத்திருந்த சர்வதேசச் செஞ்சிலுவைச்சங்கம் இப்போது ஜேர்மனியிடம் இந்த ஆவணக்காப்பத்தைக் கொடுத்தாலும், அதனைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தனது ஆதரவைத் தொடந்து வழங்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்குத் தொடர்ந்து கிடைக்கும் என ICRCன் பொருப்பாளர் மாரெர் தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கம் தனது நிர்வாகப் பொறுப்பை மட்டும் ஜெர்மனிக்கு வழங்குகிறதே தவிர காப்பகத்தை அப்படியே கைகழுவி விடவில்லை, என்று மாரெர் உறுதிபடத் தெரிவித்தார். செம்பிறைச் சங்கங்களும் இந்த ஆவணக் காப்பகத்தின் பராமரிப்புக்கு ஜேர்மன் அதிகாரிகளுக்கு உதவத் தயாராக இருக்கின்றது.

சுவிஸ் வங்கியின் தலைமைச் செயலகம் விற்பனை



சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுவிஸ் வங்கி தன் முதலீட்டைப் பெருக்குவதற்காக, ஜுரிச் நகரில் இருந்த தன் தலைமைச் செயலகக் கட்டிடத்தை நார்வே நாட்டு ஓய்வூதியத் திட்டத் துறைக்கு 1 பில்லியன் ஃபிராங்குக்கு 25 ஆண்டு காலத்துக்கு கொடுத்துள்ளது. ஒத்திப் பத்திரத்தில் 25 ஆண்டுகள் முடிந்த பின்பு மேலும் ஒரு 15 ஆண்டுகள் ஒத்து நீட்டிக்கப்படலாம் என்றும் எழுதப்பட்டுள்ளது. Uetilhole என்று அழைக்கப்பட்ட தலைமைச் செயலகம் நார்வேக்கு இன்று முதல் கைமாறியது என்ற செய்தியை சுவிஸ் வங்கி நேற்று வெளியிட்டது.
எனினும் இச்செயலகத்தில் தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் நடைபெறும். 1970ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட Uetilhole என்ற தலைமைச் செயலகம் 137,807 சதுர மீற்றர் பரப்பளவு உடையது. இதனை ஒத்தி வைத்ததால் வங்கிக்கு 83.7 மில்லியன் ஃபிராங்க் முதலீட்டுத் தொகையாகக் கிடைக்கும்.
கடந்த வருடம் சுவிஸ் தேசிய வங்கி, கிரெடிட் சுவிஸ் வங்கியிடம் முதலீட்டைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. முதலீட்டைப் பெருக்குவதால் மட்டுமே கிரெடிட் சுவிஸ் வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகத் திகழ முடியும் என்பதால் இந்த வங்கி தனது தலைமைச் செயலகத்தை ஒத்திக்கு விட்டு பணம் வாங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதமும் கிரெடிட் சுவிஸ் வங்கி தனது Metrolpol கட்டிடத்தை விற்றுக் காசாக்கியது. இந்தக் கட்டிடம் ஜுரிச் தலைமையக கட்டிடத்திலிருந்து சிறிது தொலைவில் தான் இருந்தது. இதனை எவ்வளவு பணத்துக்கு விற்றது என்று என்ற தகவலை வங்கி வெளியிடவில்லை.

என்னை கொடுமைப்படுத்துகின்றனர்: 7 வயது சிறுவன் பரபரப்பு புகார்

தன்னை தனது பெற்றோர் துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுவன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அனுபமா.
இவர்கள் நோர்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம், நோர்வேயில் உள்ள பள்ளியில் படிக்கிறான்.
இவனது ஒழுக்கம் குறித்து கவலை அடைந்த பெற்றோர், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் தன்னை தனது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து பொலிசில் பள்ளி நிர்வாகம் புகார் அளிக்கவே, மாணவனின் பெற்றோரை பொலிசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தினர் கூறுகையில், ஏற்கனவே நோர்வே நாட்டு சிறார் நலப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீராமை தங்களது பொறுப்பில் கொண்டு சென்று ஒரு மாதம் வைத்திருந்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு ஹைபராக்டிவ் பிரச்சினை இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரிடம் கொண்டு வந்து விட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்த சந்திரசேகருக்கு, நீதிமன்றத்தில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அங்கு சென்றவுடன் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த கைது குறித்து எங்களுக்கு நோர்வே தரப்பிலிருந்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர் என்றனர்.
தற்போது சாய் ஸ்ரீராம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மனநல மையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறான்.

சவீதா விவகாரம்: ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ?

அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு மறுத்த காரணத்தினால், இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்தார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவீதா, தன்னுடைய கணவர் பிரவீனுடன் வசித்து வருகிறார்.
இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது. இதனையடுத்து கருக்கலைப்பு செய்யும்படி பிரவீன் கூறினார்.
ஆனால், கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு குற்றம் என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ரத்தம் விஷமாகி கடந்த அக்டோபர் 28ஆம் திகதி பரிதாபமாக சவீதா இறந்தார்.
உலகின் பலநாடுகளும் மருத்துவர்கள் அலட்சியத்தை கண்டித்தன. இந்நிலையில், சவீதாவின் மரணம் குறித்து பொது விசாரணை நடத்த அயர்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஜேம்ஸ் ரெய்லி ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து ஐரோப்பிய மனித உரிமை மீறல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரவீனும், சவீதாவின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
பிரவீன் சார்பில் வக்கீல் ஓ டோனெல் ஆவணங்களை தயாரித்து வருகிறார். அடுத்த வாரம் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் வக்கீல் தெரிவித்துள்ளார்.
பிரவீன் கூறுகையில், என் மனைவி சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அதிகாரிகள் நடத்திய 2 தனித்தனி விசாரணையில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளார்