சர்வதேச நாணய நிதியத்தின்
தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி
விலகினார்.
இவர் நியூயார்க்கில் ஹோட்டல் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, பணிப்பெண்
ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ட்ராஸ்கான், பின் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்ட்ராஸ்கான் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாலியல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி, குறித்த பெண்ணுக்கு பணம் கொடுக்க ஸ்ட்ராஸ்கான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஸ்ட்ராஸ்கானின் வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர் |
சனி, 1 டிசம்பர், 2012
பணத்தை கொடுத்து பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக