siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வைரமுத்து வின் மூன்றாம் உலக போர்{ காணொளி,}

28.09.2012.By.Rajah.

அவுஸ்திரேலியாவிற்கு'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற 77பேர் கைது



Friday28September2012,By.Rajah.அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77பேரை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள், மோதர துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!

 





28.09.2012.By.Rajah.தலைப்பை பார்த்துவிட்டு புது மேட்டரா இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை) பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ கிடைத்த தலைப்பு தான் இது
.
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத வில்லை! அதையும் மீறி புண் படுத்தி இருந்தால் தயை கூர்ந்து மன்னித்தருள்க!

சரி நாம மேட்டருக்கு வருவோம்! நம்ம மணி ரத்தினம் சார் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்த ரீமேக் பண்ணி வசனம் எழுதி இருந்தார்னா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை!!!!


இடம்: ஒரு அருவி அருகில் அரண்மனை ! ( மணிரத்னம் படம்ல அருவி கண்டிப்பா இருக்கணும்)
நேரம் : இரவு (மேல சொன்ன அதே மணி ரத்னம் தான் காரணம் )

( நம்ம தமிழ் படத்துல தான் இங்கிலீஷ் காரன் கூட தமிழ் பேசுவான் அதனால லாஜிக்லாம் பாக்க கூடாது வசனம் தான் முக்கியம் )
காட்சி- 1
ஜாக்சன் :- ஜாக்சன் !
வீர பாண்டிய கட்ட பொம்மன்: பொம்மன் ! வீர பாண்டிய கட்ட பொம்மன் !! (மீசையை முறுக்கி கொண்டே )
பெயரின் நீளம் கருதி இனி ஜாக்சன் , ஜாக் எனவும் வீரபாண்டிய கட்ட பொம்மன் .வீரா வாகவும் !!



ஜாக்: குடுக்கணும் !
வீரா : என்ன ?!
ஜாக்: வரி,வட்டி,கிஸ்தி!
வீரா: முடியாது!?
ஜாக்: குடுக்க வைப்பேன்

வீரா: மிரட்டுறீங்களா கலெக்டர் சார், இது வீரா சார், வீராப்பு காட்டாதீங்க! , வீணா போய்டுவீங்க!
ஜாக் : நிறுத்து உன் பேச்சை !
வீரா : முதல்ல நீ நிறுத்து! நான் நிறுத்துறேன் !!
ஜாக்: எதை நிறுத்தனும் ?
வீரா: ஒங்க ஊரு பொருள விக்கிறதுக்கு வந்த நீ!, எங்ககிட்டயே வரி வாங்குறியே அத நிறுத்து ! நான் நிறுத்துறேன் !

எங்க ஆளுங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்களையே காட்டி குடுக்க சொல்ற பார்! அத நிறுத்து! நான் நிறுத்துறேன் !

நீ காசு குடுத்ததும் பல்ல காட்டிகிட்டு எங்கள காட்டி குடுக்குறான் பார் ஒரு கம்மிநாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் !



அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்!!!!


(வில்லன் வாய்ஸ் கொடுப்பது நம்ம கெளதம் -எப்பவும் அவர்தானே வில்லனுக்கு வாய்ஸ் கொடுப்பாரு )


ஜாக்சன் ( தனது கூட்டாளிகளுடன் ) : நாம எங்க போனாலும் -----தா அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும் ! அந்த ஊரை நாம ஆளனும்!
அந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! தூக்கிருங்க ! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே!

தூரத்தில் கோட்டையின் கதவுகளை உடைத்து கொண்டு வீர பாண்டியன் எனும் பாண்டியன் வருகிறார்!

பாண்டியன்:- இந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! கிஸ்தி! வரி ! வட்டி எதுவும் தரமட்டிகிறான், அவன் கண்ண எடுத்துட்டு வந்தா எதோ ஐம்பது பொன் காசு தாரேன்னு சொன்னியாமே ! வா ! என் கண்ண பொட்டயாக்கு ! என தனது இமைகளை கைகளால் விரித்து கண்களை காட்டுகிறார்

ஜாக்சன்: வேணாம் பாண்டியன் என்னபத்தி உனக்கு தெரியாது !?

பாண்டியன் : நீ யாருன்னும் தெரியும் ! ஒங்க அம்மா இங்க எப்படி வந்தாங்க அப்படின்னும் தெரியும்டா!

அந்த நேரத்தில் பின்னணி பாடலுடன் ஒரு சண்டை காட்சி!

என்ன பாக்குறீங்க ! படம் முடிஞ்சு போச்சு ! ஒரே காட்சியில ரெண்டு படம் பாத்த மாதிரி இருந்துச்சா ! அப்புறம் என்ன ! பதிவு எப்படி இருக்கிறது என மறக்காமல் கமெண்ட் போட்டுட்டு கெளம்புங்க !!!

தாண்டவம். விமர்சனம்


Friday28September2012.By.Rajah..பாடல்கள் ,பின்னனி இசைமிக அருமை,அனுஷ்கா-விக்ரம் பார்ட் மிக அழகிய ஹைக்கூ கவிதை.கதை என்னவென்றால் காலம் காலமாக நமது டைரக்டர்கள் அரைத்து அரைத்து புளிக்க வைக்கப்பட்ட அதே பழைய பழிவாங்கும் கதை தான்.இதில் என்ன புதுமை என்றால் நாயகன் பார்வை பறிபோனவர் .கதை லண்டணில் நடக்கிறது அவ்வளவுதான்.
கதாநாயகனுக்கு ஏன் பார்வை போனது ,ஏன் பழிவாங்குகிறார் என்பது பிளாஷ்பேக்காக விரிகிறது கதை.சுமரான கதை,மிக சுமரான திரைக்கதை இதையெல்லாம் மீறி படம் எப்படி பிடிக்கிறது எனில் தெளிந்த நீரோடை போன்ற காட்சி அமைப்பு,படக்கோர்வை,பின்ணனி இசை,அனுஷ்கா-விக்ரம் பார்ட் இது மட்டுமே.லட்சுமிராய்&எமிஜாக்சன் -அழகிய ஊறுகாய் பாட்டிகள் அப்போ அப்போ தொட்டுக்கொள்ள மட்டுமே பயன் படுத்துபட்டு இருக்கின்றார்கள்.

கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார். அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.


லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.

மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.


பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.


முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது. விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி

டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி.

முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு
மொத்தத்தில் தாண்டவம் எத்தகைய எதிர் பார்ப்பும் இன்றி செல்லுங்கள் ஏமாற்றம் இருக்காது. .....அருமையான படம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் படம் பிடிக்கவே செய்யும் எல்லாருக்கும்

அமெரிக்காவில் தீவிரவாதி வேடத்தில் தம்பியை வீதியில் உலவ விட்ட வாலிபர்



Friday28September2012By.Rajah. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ்நகரை சேர்ந்தவர் மைக்கேல் டி டர்லி. இவர் தனது தம்பிக்கு தீவிரவாதி வேடமிட்டார். அவரது முகத்தை துணியால் மூடினார். போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை கொடுத்து அதை தோளில் சுமந்தபடி போயனிஸ் நகரின் மிகவும் பரப்பரப்பான வீதியில் உலவ விட்டார்.

அதை வீடியோ காமிரா மூலம் படம் பிடித்து அதை யூடியூப் இணைய தளத்தில் வெளியிட்டார். அதைபார்த்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மக்களிடையே தீவிரவாதி குறித்த பீதியை ஏற்படுத்திய டர்லியை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கடந்த ஜூலை 20-ந்தேதி அரோரா சினிமா தியேட்டரில் மர்ம நபர் சுட்டதில் 20 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து நகரில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து பரி சோதிக்கவே நான் இவ்வாறு நடந்து கொண்டேன் என தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி இதை கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். சம்பவத்தன்று போனியஸ் நகர வீதியில் தீவிரவாதி வேடத்தில் ஒரு நபர் சுற்றி வருவதையும், அவருடன் டர்லி வீடியோ காமிராவுடன் வந்ததையும் ஒரு போலீஸ் அதிகாரி பார்த்தார். ஆனால் அந்த நபர் டர்லி தம்பி வைத்திருந்த போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை பறிமுதல் செய்யவில்லை எந்தவிதமான பதட்டத்தையும், பரபரப்பையும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.. டர்லியிடம் இது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஒரு சினிமா படத்துக்காக தான் ஷுட்டிங் நடத்துவதாக கூறி விட்டார். எனவே தான் அந்த அதிகாரி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் கூறினார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டர்லி ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதிக ஆண்மையுடன் இருந்தால் ஆயுள் குறைவு. ஆய்வில் அதிர்ச்சி தகவல்



Friday28September2012.By.Rajah.உலகஅளவில் ஆண்களைவிட பெண்களே அதிக ஆயுளுடன் உள்ளனர். ஆண்கள் முன்கூட்டியே இறந்து விடுவதற்கு அவர்கள் ஆண்மையுடன் இருப்பது தான் காரணம் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

ஆண்களின் உயிர்அணு பையில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் தான் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும். இதனால் ஆண்களுக்கு இதயம் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது. இதனால் அவர்கள் ஆயுளும் குறைகிறது என்று ஆய்வு சொல்கிறது.

அதே நேரத்தில் மாடுகளுக்கு ஆண்மையை அகற்றுவது போல குறிப்பிட்ட வயதில் ஆண்களின் ஆண்மையை அகற்றிவிட்டால் அவர்களும் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதற்கு கொரியாவில் நடந்த சம்பவம் ஓன்றை உதாரணமாக கூறுகின்றனர்.

கொரியாவில் முன்பு கோசுன் பேரசு என்ற மன்னர் ஆட்சி நடந்து வந்தது. அப்போது இளைஞர்களின் ஆண்மையை அகற்றிவிட்டு அவர்களை அரண்மனை காவலராக நியமித்தனர். 81 பேர் இதே போல நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் உயிருடன் இருந்தனர்.

அவர்களின் சராசரி ஆயுள் 70 அக இருந்தது. 3பேர் 100 வயதுக்கு மேலும் உயிருடன் இருந்தனர். ஆனால் அப்போது கொரியர்களின் சராசரி ஆயுள் 50 ஆகத்தான் இருந்ததது. எனவே ஆண்மை இல்லாமல் இருந்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று ஆய்வாளர்கள் உறுதிபட சொல்கின்றனர்

தீவுப் பிரச்சனையில் சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை. ஜப்பான் பிரதமர்

         
 

Friday28September2012தீவுப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் வாய்ப்பில்லை என்று ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள யோஷிகிஹோ நோடா செய்தியாளர்களிடம் கூறியது: ""இப்பிரச்னையை சீனா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜப்பானிய பிரஜைகளை தாக்கி, அவர்களது உடமைகளைச் சேதப்படுத்துவோர் மீது அந்நாட்டு அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்காகூ தீவுகள், சர்வதேச சட்டப்படியும், வரலாற்று ரீதியாகவும் ஜப்பானின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இது தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை'' என்றார்.

கிழக்கு சீனக் கடற்பகுதியில் இந்தத் தீவுக் கூட்டங்களை டயாயூ என்ற பெயரில் சீனா அழைக்கிறது. அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்றும் உரிமை கோரி வருகிறது.
சீனா பதிலடி: ""சம்பந்தப்பட்ட தீவை தன்னுடையது என்று கூறுவதன் மூலம் ஜப்பான் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது. மற்ற நாடுகளின் இறையாண்மையை ஜப்பான் மதித்து நடக்க வேண்டும்'' என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறினார்.

முன்னதாக இரு நாடுகளின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர்களுக்கு இடையே நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடந்தது. கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்த போதிலும், தீர்வு எதுவும் ஏற்படவில்லை. எனினும், தொடர்ந்து பேச்சு நடத்தித் தீர்வு காண்பதையே விரும்புவதாக இரு நாடுகளும் கூறி வருகின்றன

சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி!இலங்கை அரசாங்கம்


Friday28September2012By.Rajah.இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இலங்கை போக்குவரத்து சபையில் 5000 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன அதில் 3500 பஸ்கள் வரை பாவனைக்கு ஏற்றவகையில் அமைந்திருக்கவில்லை.
எனவே சீனாவில் இருந்து பஸ்களை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறையில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தனியார் போக்குவரத்து துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் சொகுசு வாகனங்கள் இறக்குமதி
இலங்கையில் இறக்குமதி வரியற்ற வகையில் பாவனைக்காக 312 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து 525 வாகனங்கள் இறக்கப்பட்டன.
அதில் 312 சொகுசு வாகனங்கள், இறக்குமதி தீர்வையற்ற வகையில் தருவிக்கப்பட்டுள்ளன.
அதில் பெரும்பாலானவை, Montero Sport, KIA/Hyundai SUV, BMW X 1, X 3, 520D ,Audi A 4, A6 ரகங்களை சேர்ந்தவையாகும்
இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5000 அமரிக்க டொலர் பெறுமதியை கொண்டவையாகும்.
இலங்கை அரசாங்கத்துக்கு இறக்குமதி வரியற்ற வாகனங்கள் காரணமாக பல மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அதனையும் மீறி இறக்குமதி செய்யப்படடு சொகுசு வாகனங்கள், மூன்று வருடங்களுக்கு விற்பனை செய்யப்படக்கூடாது என்று நடைமுறையை மீறி மூன்றாமவருக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் பொதுச்சேவையில் உள்ளவர்களினால் மாற்று ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன

இலங்கையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா,நைஜீரியா!


Friday28September2012By.Rajah.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தங்களது செயற்பாடுகளுக்கு மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை பயன்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த நாடுகளுக்கு இலங்கை அகதிகளை அழைத்து அங்கிருந்து சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வீசா மூலம் அழைத்துச் செல்லப்படும் சிலர் அங்கேயே நிர்க்கதியான நிலையில் கைவிடப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு கைவிடப்பட்ட 300 பேர் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.