சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாக
நீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி வரும் காலங்களை வளமானதாக்க முடிவு செய்துள்ளோம்
ஒற்றுமையே உயர்வு தரும்
பின்குறிப்பு :நன்றி உங்களின் பதில் கடிதத்துக்கு காலமறிந்து நீங்கள் எடுத்த முடிவால் இந்த இணையமும் சிறுப்பிட்டி மேற்கு (தாய்) ஒன்றியமும் பெரு மகிழ்வு கொள்கின்றது.இதற்க்கான வெளிப்படையான எமது பதில் மிக மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும். பதிவிட்ட கணமே செயல் பாட்டிலும் இறங்கும். நன்றி
செயல்பாட்டுடன் கூடிய ஒற்றுமையே நீண்ட கால பலனை நம் உறவுகளுக்கும் எமக்கும் நிறைவைதரும்.
சிறுப்பிட்டி மேற்கு லண்டன் கிளை ஒன்றியத்தினரே உங்களுக்கான காலம் இன்னும் இரண்டு நாட்க்களே சிந்தித்து கிராம நலன் கருதி உங்களின் முடிவை இணைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 10 ஜனவரி, 2013
38 மாணவர்கள் பயணித்த பள்ளிப் பேருந்தில் தீ
உச்சிப்பனிச் சறுக்கு விளையாட பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்குக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து யூரி மாநிலத்தில் திடீரென தீப்பிடித்தது.
உடனே ஓட்டுநர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி 38 மாணவர்களையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டார்.
உடன் சென்ற 7 பெரியவர்களும் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினர்.
கோத்தார்டு குகைப்பாதைக்குள் நுழையும் இடத்தில் கடந்த 8ம் திகதி அதிகாலை 5 மணியளவில் A2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக யூரி மாநிலப் பொலிசார் தெரிவித்தனர்.
கோட்ஹார்டு தீயணைப்புப் படை வீரர் தீயை அணைத்தனர். 12000 ஃபிராங்க் மதிப்பிலான பொருட்சேதம் இத் தீவிபத்தில் ஏற்பட்டுள்ளது.
பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 20 அன்று கோட்ஹார்டு குகைப்பாதையில் காரும் சரக்குப் பெட்டக வண்டியும் மோதியது குறிப்பிடத்தக்கது
அதிர்ச்சியில் உறைந்து போனது மூதூர் பிரதேசம்!
மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.
மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள்.
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள்.
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்
வராத மாணவியை பள்ளியிலிருந்து நீக்கலாம். அமெரிக்க கோர்ட்
அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்' நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
வகுப்புகள் துவங்குவதற்கு முன்னும், மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்' என்றனர்.
இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், ""பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்' அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு,'' என்றார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)