ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு
கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் "இணைய கண்ணாடி"களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது.
இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் கொண்டு எளிதில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை நடத்த உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பங்கு பெறுபவர்கள் அமெரிக்காவில் வசிக்க
இவர்கள் 50 வார்த்தைகளில் இந்த கண்ணாடி கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று விவரிக்கும் விண்ணப்பத்தை வரும் புதன் கிழமைக்குள் கூகுள் பிளஸ் அல்லது டுவிட்டர் மூலமாக அளிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது.
ஆனால், இந்தப் போட்டியில் எத்தனை நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் என்று தெரிவிக்கவில்லை. கண்ணாடி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கண்ணாடிகள் அடுத்த வருடம் சந்தைகளில் கிடைக்கும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் சில கண்ணாடிகளை கம்ப்யூட்டர் வல்லுனர்களுக்கு 1500 டொலருக்கு விற்பனை செய்திருக்கிறது.
சந்தைக்கு வரும் இணையக் கண்ணாடிகளின் விலை ஸ்மார்ட் போன் விலையை விட கூடுதலாகவும், 1500 டொலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.{காணொளி}
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 21 பிப்ரவரி, 2013
இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய
பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் தலைமையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாலியல் தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 முதல் 35 சதவீதத்தை இவர் பெற்றுக் கொண்டதாகவும் பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ரிஷிக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறியுள்ள
தொடர்ந்தால் வடகொரியா மீது புதியபுதிய தடைகள்: .....
வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரியா ஜனாதிபதி மியூங் பக் எச்சரித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன.
இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அது தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
வடகொரியா சமீபத்தில் மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதையடுத்து அதன் மீது ஐ.நா. மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
பிரித்தானியா பெண்கள் கொந்தளிப்பு,,
பிரித்தானியாவில் சிறுவனுக்கு காண்டம் விற்ற கடைக்காரருக்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா ஓப்பி, என்பவர் தன் பத்து வயது மகனுக்கு கை செலவுக்கு பணம் தந்தார்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில் 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்" விற்ற கடைக்காரரிடம் சண்டை போட்டார்.
இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில், கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை விற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. மேலும் குறிப்பிட்ட வயதினருக்கு ஆணுறை விற்க தடைசெய்யும் சட்டம் பிரித்தானியாவில் இல்லை.
ஆணுறைக்குள் நீரை நிரப்பி, தண்ணீர் பந்து போல விளையாடுவான் என்று நினைத்து விற்றோம் என்றார். இதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குழந்தைகளுக்கு ஆணுறை விற்பதை தடை செய்யும் சட்டம் ஏதும் இல்லையென்றாலும் இந்த விடயத்தில் கடைக்காரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)