ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு
கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் "இணைய கண்ணாடி"களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது.
இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் கொண்டு எளிதில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை நடத்த உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பங்கு பெறுபவர்கள் அமெரிக்காவில் வசிக்க
இவர்கள் 50 வார்த்தைகளில் இந்த கண்ணாடி கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று விவரிக்கும் விண்ணப்பத்தை வரும் புதன் கிழமைக்குள் கூகுள் பிளஸ் அல்லது டுவிட்டர் மூலமாக அளிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க உள்ளது.
ஆனால், இந்தப் போட்டியில் எத்தனை நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் என்று தெரிவிக்கவில்லை. கண்ணாடி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கண்ணாடிகள் அடுத்த வருடம் சந்தைகளில் கிடைக்கும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் சில கண்ணாடிகளை கம்ப்யூட்டர் வல்லுனர்களுக்கு 1500 டொலருக்கு விற்பனை செய்திருக்கிறது.
சந்தைக்கு வரும் இணையக் கண்ணாடிகளின் விலை ஸ்மார்ட் போன் விலையை விட கூடுதலாகவும், 1500 டொலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.{காணொளி}
வியாழன், 21 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக