மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெயினை சேர்ந்த மத குருக்கள் மானுவேல் கார்சியா வியஜோ மற்றும் மினகல் பஜாரஸ் ஆகியோர் எபோலா நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவர்களில் மானுவேல் கார்சியா வியஜோவுக்கு சியாரா லோனிலும், மினகல் பஜாரஸ்க்கு லைபீரியாவிலும் எபோலா நோய் தாக்கியது. இவர்களுக்கு ஸ்பெயினில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, அவர்களுக்கு நர்சு ஒருவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு கடந்த வாரம் அவரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
எனவே பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ‘எபோலா’ நோய் பாதித்து இருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மாட்ரிட் அருகேயுள்ள அல்கார்கன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக ஸ்பெயின் சுகாதார மந்திரி அனா மாரூடா தெரிவித்துள்ளார். தாமஸ் டன்கான் என்பவரும், லைபீரியாவில் எபோலா நோய் பாதித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, அமெரிக்கா வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.