தனியொருவராக 546 ரன்கள் குவித்து சச்சினின் சாதனையை உடைத்துள்ளார்.
அந்த பள்ளி மாணவரின் பெயர் பிரிதிவ் ஷா. 15 வயதே ஆன இவர், ஹாரிஸ் ஷில்ட் கிரிக்கெட் தொடரில் செயிண்ட் பிரான்ஸிஸ் அணிக்கு எதிராக விளையாடி 330 பந்துகளை சந்தித்து 85 பவுண்ட்ரிகளும், 5 சிக்சர்களும் அடித்து மொத்தம் 546 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பள்ளி கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை புரிந்த தாதாபாய் ஹேவ்வாலாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

1933ஆம் ஆண்டு ஹேவ்வாலா என்ற மாணவர் 515 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதுமட்டுமின்றி பள்ளி கிரிக்கெட்டில் உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்து மற்றொரு சாதனையையும் புரிந்துள்ளார் பிரிதிவ் ஷா. 628 ரன்கள் குவித்து காலின்ஸ் என்பவர் முதலிடத்திலும், 566 ரன்கள் குவித்து ஸ்டிரக் என்பவர் என்பவர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.