முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை ஜேர்மன் நாட்டவர் இலங்கையி்ல்
வடிவமைத்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த ஒருவரே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் தனது சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தொடரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா வந்த இவர், தனது பயணத் தேவையை பூர்த்திசெய்ய இந்த முயற்சியே மேற்கொண்டுள்ளார்.