மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு
விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
அன்வர் இப்ராகிம், ஓரின சேர்க்கை வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.