
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக...