தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர்.
இலங்கை தமிழ்ப்பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும், அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவர் மைக்கேலுடன் இணைந்து கொள்வதற்காக ஒரு சட்டவிரோதமான படகில் பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்து நவ்ரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் வைத்து அந்த இலங்கை தமிழ்ப் பெண்ணிடம், நீ உனது கணவனை அவுஸ்திரேலியாவில் காண இயலாது. ஆகவே திரும்பி சென்றுவிடு என்று அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ருத் என்ற பெயருடைய இலங்கை தமிழ்ப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.