உலகெங்கும் வாழும் ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்களின் 266 வது தலைமை மதகுருவாக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 19ம் தேதி புதிய போப்பாக அவர் பதவி ஏற்றுக்கொள்கிறார். தங்கள் நாட்டைச் சேர்ந்த மதகுரு போப்பாக பதவியேற்கும் இனிய நிகழ்வை நேரில் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரோம் நகருக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவுக்கான வாடிகன் தூதரை சந்தித்த போப் பிரான்சிஸ், ”எனது பதவியேற்பு விழாவை நேரில் காண்பதற்காக ரோம் நகருக்கு வரும் பெரிய செலவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படி சொல்வதனால் அவர்களின் வருகையை நான் தடை செய்யவில்லை. ஆனால், இந்த பயணத்திற்காக ஆகும் செலவை ஏழைகளுக்கான உதவிகளை செய்து, தர்ம காரியங்களில் என் நாட்டு மக்கள் ஈடுபடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக வாடிகன் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் பெடரிகோ லொம்பார்டி கூறியுள்ளார்