ஜேர்மனியின் Hamburg பகுதியில் பேருந்துடன் ரயில் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Hamburg நகரின் புறநகர் பகுதியான Buxtehude அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து மீது விரைவு ரயில் ஒன்று மோதிக்கொண்டது.
ரயில் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற நோக்கில் பள்ளிச் சிறுவர்களுடன் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது.
இந்நிலையில், பேருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, ரயில் வருவதையொட்டி தானியங்கி தடுப்பு அந்த பேருந்தை நகரவிடாமல் தடுத்துள்ளது
.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xyouXMsOjcw" frameborder="0" allowfullscreen></iframe>
சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்த சிறுவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இதனிடையே ரயில் ஓட்டுநருடன் தொடர்புகொள்ள எத்தனித்த பேருந்து ஓட்டுநருக்கு ஏமாற்றமே மிஞ்சியது,
மேலும் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ரயில் மீது மோதி அதன் முன் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றது.
இதில் ரயிலுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது, மேலும் ரயில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தனர்.
சமயோசிதமாக பேருந்து ஓட்டுநர் செயல்படவில்லை எனில் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.