siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 8 செப்டம்பர், 2012

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்

08.09.2012.BY.Rajah.அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து பணிபுரியும் ஊழியர்களை சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறுகையில், அரசு அலுவலக ஊழியர்கள் 1000 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கணனி பணி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் கழுத்து வலி இருப்பதாகவும், தோள்பட்டை வலி இருப்பதாக 75 சதவிகித பேரும், முதுகு வலி இருப்பதாக 70 சதவிகித பேரும் கூறியுள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று 1980ஆம் ஆண்டுகளில் இருந்தே மருத்துவ ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இதையடுத்து ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, சோபாவில் சாய்ந்தபடி வேலை பார்க்கும் வசதிகளை சில முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தின.
அலுவலகங்களில் வீடியோகேம், ஒர்க்ஸ்டேஷன் போல கணனி சீட்களை மாற்றி அமைத்தனர். இதன் பிறகு ஊழியர்களின் கழுத்து, முதுகு வலிகள் ஓரளவு குறைந்தன. ஆனாலும் வலி பிரச்னைகள் முழுவதுமாக தீரவில்லை.
ஆண்டுகள் ஆக ஆக, இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்லா வேலைக்கும் இடம் விட்டு நகர வேண்டி இருந்தது. போன், கைபேசி, கணனி, இணைய வசதிகள் வந்த பிறகு நகர்தல் குறைந்து வருகிறது.
உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலைகளும் முடிகின்றன. மீட்டிங்கூட கான்பிரன்ஸ் கால் அல்லது வீடியோ கான்பரன்சில் முடித்து விடுகின்றனர். அதிக நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை ‘சேர் டிசீஸ்’ (நாற்காலி நோய்கள்) என்கிறது மருத்துவ உலகம்.
நாற்காலியை மாற்றுவதால், தரமான நாற்காலி போட்டுக் கொள்வதால் இப்பிரச்னை தீராது. வெகு நேரம் உட்கார்வதை தவிர்ப்பது அவசியம்.
இல்லாவிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கணனி முன்பு அதிக நேரம் உட்காரும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த அதிகாரிகள் என்றால் நோய் இன்னும் கடுமையாக தாக்கும்

கண்ணைக் கவரும் கலர் உணவுகளில் கவனம் தேவை

08.09.2012.BY.Rajah.சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால் தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில் மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ரசாயனங்களினால் ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும் சிவப்பு நிறத்தில் தருகின்றனர். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர் சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம் உண்டாக்கப்படுகிறது.
இப்படி ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம் கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர், சோரியாசிஸ் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நாளடைவில் உயிருக்கும் வேட்டு வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கேக்குகளின் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மகப்போறு மருத்துவர்களின் அறிவுரையாகும்.
ஏனெனில் கர்ப்ப காலத்தில் குளிர்பானங்களை குடிப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்டு உணவுகள் மீதான கவனத்தை குறைந்து இயற்கையான உணவுகளை உண்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்

மார்புப் புற்றுநோயி​ன் தாக்கத்தை குறைக்கும் வீட்டு வேலை

08.09.2012.BY.Rajah.உயிர்கொல்லி நோயாகவும், தெளிவான மருத்துவ தீர்வுகள் இல்லாத நோயாகவும் புற்று நோய் விளங்குகின்றது. எனினும் சில நடைமுறைகளைச் சீராகப் பின்பற்றுவதன் மூலம் இப்புற்று நோய்த் தாக்கங்களிலிருந்து விடுபட முடியும்.
அதிலும் பெண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய் வகையான மார்புப்புற்று நோயை, தினமும் வீட்டுவேலைகளில் ஈடுபாடு காட்டுவதன் மூலம் இந்த அபாய எச்சரிக்கையிலிருந்து சற்று விடுபட முடியும் என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
அதாவது தினமும் இரண்டு மணி முதல் இரண்டரை மணிநேரம் வேலை செய்யும் பெண்களை இப்புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் ஆறு சதவீதம் குறைவு என்றும், ஆறு மணித்தியாலங்கள் வரையில் வேலை செய்வோருக்கு 13 சதவீதத்தினால் இப்பாதிப்பு குறைக்கப்படுகின்றது என்றும் அறியப்பட்டுள்ளது

கவர்ச்சியாக நடிக்க மறுப்பா? ரம்யா நம்பீசன் விளக்கம்

08.09.2012.BY.Rajah.கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு பதில் அளித்துள்ளார் ரம்யா நம்பீசன்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பிட்சா படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இது குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், பிட்சா படம் த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை வெளியில் சொல்ல இயக்குனர் தடை விதித்திருக்கிறார்.
கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால்தான் அதிக படங்களில் நடிக்கவில்லையா? என்கிறார்கள்.
குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட நான் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் எனக்கு கவர்ச்சியான வேடங்கள் எதுவும் அமையவில்லை. வேடத்துக்கு ஏற்பவே நடித்திருந்தேன்.
சில படங்களில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கேட்டதால் அதனை ஏற்கவில்லை.
பிட்சா படத்தை பொறுத்தவரை காதலர்களுக்கு இடையேயான காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதை ஏற்று நடித்திருக்கிறேன்.
அடுத்து இரண்டாவது படம் என்ற படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

ஏக் தா டைகர் உண்மைக் கதையா?

08.09.2012.BY.Rajah.பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஏக் தா டைகர் படம் உண்மைக் கதை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சல்மான் கானின் சம்பளத்தை 100 கோடி ரூபாய்க்கு உயர்த்திய படம் ஏக் தா டைகர்.
1970ஆம் ஆண்டுகளில் ரவீந்தர் கவுசிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழாவில் கண்ட இந்திய உளவுப்படை அதிகாரிகள், அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்துக் கொண்டே சட்டப்படிப்பு படித்து உளவுப்படையில் சேர்ந்து உயர் அதிகாரியானார்.
அப்போது பாகிஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதும் இந்தியாவிற்கு விசுவாசமாவே வேலை பார்த்தாராம்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அரசு இவரை அடையாளம் கண்டு மரணதண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
அதுவரை இவரை பயன்படுத்திக் கொண்ட இந்திய உளவுப்படை அவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு ரவீந்தர் கவுசிக் இறந்துவிட்டார். உளவு வேலையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு ‘கருப்பு டைகர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
இந்தியாவிற்காக தன் வாழ்க்கையையே தொலைத்த ரவீந்தரனின் குடும்பமோ தற்போது வறுமையில் வாடுகிறது. எனவே தங்களுக்கு ஏக் தா டைகர் படக்குழுவினர் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனராம்.
இதை தயாரிப்பாளர் நிராகரித்ததோடு, இது ரவீந்தரின் கதை அல்ல என்றும் கூறிவிட்டாராம்.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட மன்னாரு படம்

08.09.2012.BY.Rajah.கொலிவுட்டில் மன்னாரு படத்தை தமிழ் பிக்சர்ஸ் சுசி பிலிம்ஸ், ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்து புகழ் பெற்ற அப்புக்குட்டி, ராட்டினம் சுவாதி, தம்பி ராமய்யா மற்றும் பலர் மன்னாரு படத்தில் நடித்துள்ளார்கள்.
பொறுப்பாக வேலை செய்யாமல் ஷகிலா படம் பார்க்கபோய் வாழ்க்கையில் பகீர் திருப்பத்தை சந்திக்கும் மன்னாரு என்ற மைய கதாப்பாத்திரத்தில் அப்பு நடித்திருக்கிறார்.
இரவுக்காட்சி படம் பார்த்திட்டு நண்பனின் அறையில் மன்னாரு தங்குகிறார்.
அங்கே முளைக்கும் சிக்கல் மன்னாருவின் வாழ்க்கையை குப்புறக் கவிழ்த்தி குதியாட்டம் போடுகிறது.
மன்னாருவின் நண்பனும் சுவாதியும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். தமிழ் சினிமா வழக்கப்படி ஆக்ரோஷமாக வில்லன் கோஷ்டி விரட்டி தேடுகிறது.
குடிகார மன்னாருவோடு சிக்கலான சூழ்நிலையில் சுவாதி மலை கிராமத்தில் வாழ்கிறார். வில்லன் பிடியில் சுவாதியின் காதலன் தவிக்கிறார்.
மன்னாருவோடு வாழ ஆசைப்படும் முறைப்பெண் வைசாலியும் ஊர் மொத்தமும் மன்னாரு அப்பு- சுவாதி இருவரையும் கணவன்- மனைவியாக பார்க்கிறது.
சுவாதி தன் காதலனோடும் மன்னாரு அப்பு தன் முறைப்பெண்ணோடும் எப்படி இணைகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.
படத்துக்காக அப்பு அசல் குடிகாரராக மாறியிருக்கிறார். ஊர்த்தலைவர் தம்பி ராமய்யாவோடு அப்பு வாதிவது நல்ல கொமெடி.
யதார்த்தமான கோணத்தில் கதையை நகர்த்த இயக்குனர் ஜெய்ஷங்கர் முயற்சித்துள்ளார். உதயனின் இசை, அக்கு அஜ்மலின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்

காத்தான்குடியில் இரு குழுக்களிடையே மோதல்: 4பேர் கைது


08.09.2012.BY.Rajah.

காத்தான்குடி நகரல், இரு குழுக்களிடையே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தேடப்படுகின்றனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மெத்தைப்பள்ளியடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் அது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது துண்டுப்பிரசுரம் விநியோகித்த நான்கு பேரில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் இருவரைக் கைது செய்ததுடன் மேலும் இருவரைத் தேடிவருவதாகத் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது படுகாயமடைந்தவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

நீதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்பதில்சந்தேகம்:


08.09.2012. By .Rajah.
அரியநேத்திரன்  
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறும் என்பதில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைக் கொண்டு சந்தேக நிலையை உருவாக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாளை சனிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மண்டூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு முற்றுமுழுதான தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகவே கருதவேண்டும்.ஓர் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் பட்டப்பகலில் மதுபானப்போத்தல்கள் ஓர் அரச கட்சி ஆதரவாளரால் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை எமது ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் ஊழியர்கள் அதிகளவில் இருக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்காக பெருமளவு பெரும்பான்மையின ஊழியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை பெரும் மர்மமாகவே உள்ளது.கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் போதியளவு தமிழப்; பேசும் ஊழியர்கள் இருக்கும்போது வேறு இடங்களில் இருந்து பெரும்பான்மையின ஊழியர்கள் கொண்டுவரவேண்டிய தேவையென்ன.
அத்துடன் தமிழ்ப் பகுதிகள் சிலவற்றுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரியாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நடைபெற்றுவரும் நிகழ்வுகள் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறுமா என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் அமைப்புக்கள் சிரத்தையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறாக பொருட்கள் விநியோகம் செய்தவர் கைது


08-09-2012.BY.Rajah.
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளிப் பகுதியில் தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறான முறையில் மக்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்த ஒருவரைக் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை குருமண்வெளிப்பகுதியில் பொருட்களை விநியோகம் செய்துகொண்டிருக்கும்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் பொருட்களை விநியோகம் செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் இவ்வாறு பொருட்களை விநியோகம்செய்துவருவது தொடர்பில் முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழுக்களிடம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாக்கெடுப்பு ஆரம்பமாகியது


08.09.2012.BY.Rajah.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்காக 108 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மூன்று மாகாணங்களிலும் 3247 வாக்களிப்பு நிலையங்களில் இன்றையதினம் வாக்களிப்பு நடைபெறுகிறது. மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 33 இலட்சத்து 36 ஆயிரத்து 915 பேர் இன்றைய தினம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலானது 2011 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே முத்தரப்பு போட்டி நிலவுகின்றது.

இந்த 3 கட்கிகளுக்குமிடையில் இன்று பலப்பரீட்சை இடம்பெறவுள்ளது. இதேபோல் சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிடையில் இருதரப்புப் போட்டி நிலவுகின்றது. இங்கு பொதுச் சின்னத்தில் மலையகக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இன்று இடம்பெறும் தேர்தலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதேவேளை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் 285 நிலையங்களிலும் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் வட மத்திய மாகாண சபையில் அனுராதபுரம் மாவட்டத்தில் 608 வாக்களிப்பு நிலையங்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 287 நிலையங்களும் சப்ரமுகவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 623 வாக்களிப்பு நிலையங்களும் கேகாலை மாவட்டத்தில் 566 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்களை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 347099 வாக்காளர்களும் அம்பாறை மாவட்டத்தில் 441787 வாக்காளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 245363 வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாண சபையின் அனுராதபுரம் மாவட்டத்தில் 606507 வாக்காளர்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 294365 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 769813 வாக்காளர்களும் கேகாலை மாவட்டத்தில் 631981 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மேலும் வட மத்திய மாகாண சபையின் அனுராதபுரம் மாவட்டத்தில் 21 உறுப்பினர்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 24 உறுப்பினர்களும் கேகாலை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவ்வாறு மூன்று மாகாண சபைகளிலும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3073 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 476 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 416 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 578 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1470 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாகாணத்தில் இருந்து 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 336 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 208 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 6 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 513 வேட்பாளர்களும், இரத்தினபுரியில் மொத்தமாக வடமத்திய மாகாணத்தில் 544 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 546 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் சப்ரகமுவ மாகாணத்தில் 546 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்திலிருந்து 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிரதான ௭திர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் மூன்று மாகாணங்களிலும் போட்டியிடுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ௭ன்பன கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றன.

இதேவேளை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகள் முழுமையாக ரத்துச் செய்யப்படும் ௭ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கும் இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்புக்களுக்கும் அமைய பிறிதொரு தினத்தில் வாக்களிப்பு நடைபெறும் ௭ன்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் ( நிர்வாகம்) ௭ம்.௭ம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்

மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்



08.09.2012.BY.Rajah.

மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலையத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு, பட்டாசுகளை கொழுத்தி ஆராதனையினை குழப்ப முயற்சி செய்தமையினால் கருஸல் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் கருசல் கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த ஆலயத்தினுள் இனம் தெரியாத காடையர் குழு ஒன்று கல் வீசுதல், ஆலயத்தில் உள்ள சொரூபங்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பசம் தொடர்பில் ஆலயத்திங்கு வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் காடையர்களினால் தாக்கப்பட்டனர்.

அதன்பின் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

இதே சமயம் குறித்த ஆலயம் மீது தேமற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கேல்வியுற்ற அயல் கிராம மக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கருசல் கிராமத்திற்கு சென்றனர்.

பின் இராணுவத்தினரும்,பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அக்கிராம மக்களுக்கும், ஆலயத்திற்கும் பாதுகாப்பை வழங்கினர்