08.09.2012.BY.Rajah.பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஏக் தா டைகர் படம் உண்மைக் கதை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். |
படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சல்மான்
கானின் சம்பளத்தை 100 கோடி ரூபாய்க்கு உயர்த்திய படம் ஏக் தா டைகர். 1970ஆம் ஆண்டுகளில் ரவீந்தர் கவுசிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழாவில் கண்ட இந்திய உளவுப்படை அதிகாரிகள், அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்துக் கொண்டே சட்டப்படிப்பு படித்து உளவுப்படையில் சேர்ந்து உயர் அதிகாரியானார். அப்போது பாகிஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதும் இந்தியாவிற்கு விசுவாசமாவே வேலை பார்த்தாராம். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அரசு இவரை அடையாளம் கண்டு மரணதண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதுவரை இவரை பயன்படுத்திக் கொண்ட இந்திய உளவுப்படை அவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு ரவீந்தர் கவுசிக் இறந்துவிட்டார். உளவு வேலையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு ‘கருப்பு டைகர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இந்தியாவிற்காக தன் வாழ்க்கையையே தொலைத்த ரவீந்தரனின் குடும்பமோ தற்போது வறுமையில் வாடுகிறது. எனவே தங்களுக்கு ஏக் தா டைகர் படக்குழுவினர் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனராம். இதை தயாரிப்பாளர் நிராகரித்ததோடு, இது ரவீந்தரின் கதை அல்ல என்றும் கூறிவிட்டாராம். |
சனி, 8 செப்டம்பர், 2012
ஏக் தா டைகர் உண்மைக் கதையா?
சனி, செப்டம்பர் 08, 2012
தகவல்கள்