08.09.2012.BY.Rajah. |
காத்தான்குடி நகரல், இரு குழுக்களிடையே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தேடப்படுகின்றனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மெத்தைப்பள்ளியடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் அது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது துண்டுப்பிரசுரம் விநியோகித்த நான்கு பேரில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் இருவரைக் கைது செய்ததுடன் மேலும் இருவரைத் தேடிவருவதாகத் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது படுகாயமடைந்தவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்