மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலையத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு, பட்டாசுகளை கொழுத்தி ஆராதனையினை குழப்ப முயற்சி செய்தமையினால் கருஸல் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
குறித்த கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் கருசல் கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த ஆலயத்தினுள் இனம் தெரியாத காடையர் குழு ஒன்று கல் வீசுதல், ஆலயத்தில் உள்ள சொரூபங்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பசம் தொடர்பில் ஆலயத்திங்கு வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் காடையர்களினால் தாக்கப்பட்டனர்.
அதன்பின் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
இதே சமயம் குறித்த ஆலயம் மீது தேமற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கேல்வியுற்ற அயல் கிராம மக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கருசல் கிராமத்திற்கு சென்றனர்.
பின் இராணுவத்தினரும்,பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அக்கிராம மக்களுக்கும், ஆலயத்திற்கும் பாதுகாப்பை வழங்கினர்