siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 8 செப்டம்பர், 2012

வாக்கெடுப்பு ஆரம்பமாகியது


08.09.2012.BY.Rajah.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்காக 108 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மூன்று மாகாணங்களிலும் 3247 வாக்களிப்பு நிலையங்களில் இன்றையதினம் வாக்களிப்பு நடைபெறுகிறது. மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 33 இலட்சத்து 36 ஆயிரத்து 915 பேர் இன்றைய தினம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலானது 2011 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே முத்தரப்பு போட்டி நிலவுகின்றது.

இந்த 3 கட்கிகளுக்குமிடையில் இன்று பலப்பரீட்சை இடம்பெறவுள்ளது. இதேபோல் சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிடையில் இருதரப்புப் போட்டி நிலவுகின்றது. இங்கு பொதுச் சின்னத்தில் மலையகக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இன்று இடம்பெறும் தேர்தலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதேவேளை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் 285 நிலையங்களிலும் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் வட மத்திய மாகாண சபையில் அனுராதபுரம் மாவட்டத்தில் 608 வாக்களிப்பு நிலையங்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 287 நிலையங்களும் சப்ரமுகவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 623 வாக்களிப்பு நிலையங்களும் கேகாலை மாவட்டத்தில் 566 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்களை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 347099 வாக்காளர்களும் அம்பாறை மாவட்டத்தில் 441787 வாக்காளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 245363 வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாண சபையின் அனுராதபுரம் மாவட்டத்தில் 606507 வாக்காளர்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 294365 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 769813 வாக்காளர்களும் கேகாலை மாவட்டத்தில் 631981 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மேலும் வட மத்திய மாகாண சபையின் அனுராதபுரம் மாவட்டத்தில் 21 உறுப்பினர்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 24 உறுப்பினர்களும் கேகாலை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவ்வாறு மூன்று மாகாண சபைகளிலும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3073 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 476 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 416 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 578 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1470 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாகாணத்தில் இருந்து 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 336 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 208 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 6 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 513 வேட்பாளர்களும், இரத்தினபுரியில் மொத்தமாக வடமத்திய மாகாணத்தில் 544 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 546 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் சப்ரகமுவ மாகாணத்தில் 546 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்திலிருந்து 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிரதான ௭திர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் மூன்று மாகாணங்களிலும் போட்டியிடுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ௭ன்பன கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றன.

இதேவேளை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகள் முழுமையாக ரத்துச் செய்யப்படும் ௭ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கும் இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்புக்களுக்கும் அமைய பிறிதொரு தினத்தில் வாக்களிப்பு நடைபெறும் ௭ன்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் ( நிர்வாகம்) ௭ம்.௭ம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்