சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி 2022-இன் விருது வழங்கும் விழா.16-04-2022. இன்று சிங்கப்பூர் Expoவில் நடைபெற்றது.
COVID-19 தொடங்கியதிலிருந்து மாணவர்களுக்கான ஆகப்பெரிய நேரடி நிகழ்ச்சியாக அது அமைந்தது.
13ஆம் ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி, DSO தேசிய ஆய்வுக் கூடத்தின் 50ஆம் ஆண்டுநிறைவைக்
கொண்டாடியது.
இவ்வாண்டு 1,500க்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டு போட்டியில் கலந்துகொண்டோரைவிட அந்த
எண்ணிக்கை அதிகம்.
60க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள் 3 மாதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தங்களுடைய சொந்த பறக்கும் இயந்திரங்களை ஆராய்ந்து வடிவமைப்பதிலிருந்து அவர்களின் பிரமாண்டப் படைப்பை நீதிபதிகளிடம் முன்வைப்பதுவரை பங்கேற்பாளர்கள் கடினமாக
உழைத்தனர்.
இறுதியாக Challenge Week எனும் சவால் வாரத்தின்போது தங்களின் பறக்கும் இயந்திரங்களின் திறனை பங்கேற்பாளர்கள் நிரூபிக்க வேண்டும்.
A பிரிவில் காகித விமானங்களை boomerang போல் தூக்கியெறியும் சவாலில் வென்றது இயூ டீ தொடக்கப்பள்ளியைச் (Yew Tee Primary School) சேர்ந்த குழு
அக்குழுவில் ஒருவர் சதீஷ் குமார்.
சிறுவயதிலேயே காகித விமானங்களைச் செய்த அவருக்கு வரையவும் பிடித்ததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அவை தூண்டியதாக
சதீஷ் கூறினார்.
"என் காகித விமானத்தை boomerang போல் எவ்வாறு தூக்கியெறிவது என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் நிறைய முறை அவ்வாறு செய்துபார்த்தேன். பல முறை அதை செய்த பிறகு நான் வெற்றியடைந்தேன்" என்றார் சதீஷ்.
முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட அவர் விமானங்கள் என்றால் தனக்குப் பிரியம் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும்
அவர் தெரிவித்தார்.