
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவே போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமெனக் கூறி தீக்குளித்த மணி மரணமடைந்தார். தமிழ்நாட்டில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மணி என்பவரை தீக்காயங்களுடன் மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
உயிருக்கு போராடிய நிலையிலும் 'இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். ராஜபக்சவுக்கு எதிராக...