siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் நடிகை ஷாலினி அஜித்

21.08.2012. கொலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை பேபி ஷாலினி. பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்த ஷாலினி கொலிவுட்டில் அல்டிமேட் ஸ்டார் என்று கூறப்படும் அஜித்குமாரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். அவ்வப்போது சில விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வந்த ஷாலினி பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று...

ஹரிதாஸ் படம் சினேகாவுக்கு விருதை பெற்றுத்தரும்: ஜி.என்.ஆர் குமரவேலன்

21.08.2012. நினைத்தாலே இனிக்கும் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள படம் ஹரிதாஸ். இப்படத்தில் நாயகனாக கிஷோரும், நாயகியாக சினேகாவும் நடித்துள்ளனர். பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, இந்தப் படத்தில், ஒப்பந்தமான சினேகா, திருமணத்துக்கு பின்பும், சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும், என் கேரியரில், ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், கோச்சடையான் படத்திலிருந்து கூட...

திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை வெளியிட்டார் இயக்குனர் பாக்யராஜ்

21.08.2012. பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள படம் திருத்தணி. இதில் 'சின்ன தளபதி' பரத், சுனைனா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். படத்துக்கு பாடல்களை எழுதி, இயக்குனர் பேரரசு இசையமைத்துள்ளார். திருத்தணி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படம் வெற்றியடைய வாழ்த்தியுள்ளார்கள். விழாவில் திருத்தணி பட நாயகன் பரத், 'போராட்டங்களையும் பிரச்சினைகளையும்...

அண்ணன்- தம்பி பற்றிய கதையே நகர்ப்புறம்

21.08.2012. கொலிவுட்டில் ஜி.டி. பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி. ஆறுமுகம் தயாரித்துள்ள படம் நகர்ப்புறம். இப்படத்தில் கல்லூரி, வால்முகி படங்களில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா என்ற புதுமுக நடிகை நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர மனோபாலா, டி.பி. கஜேந்திரன், மனோகர், மீரா கிருஷ்ணன், கருத்தபாண்டி, சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.பி சாரதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார்....

சத்திராஜ் வெளியிட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படம்

21.08.2012. மரண தண்டனைக்கு எதிராக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசுகையில், இது ஒரு நடிகருக்காக கூடிய கூட்டமல்ல முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். செங்கொடியின்...

மட்டு.வில் க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு

21.08.2012.காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உஃத) மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப்...

மகாவலி கங்கையில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

21.08.2012.மகாவலி கங்கையில் நீராடிய அக்குறனை குருகொடை பகுதியைச் சேர்ந்த எம்.எம்.எம்.ரியாஸ்(23 வயது) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு...

தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலி

21.08.2012. தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலியான சம்பவமொன்று குருணாகல் மாவட்டம், நாரம்மல திகலகந்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...

விவசாயியைக் குத்திக் கொன்ற காளை

21.08.2012.சுவிட்சர்லாந்தில் ஒரு விவசாயியை அவர் வளர்த்த காளைமாடு குத்திக் கொன்றுவிட்டது. இவர் பிச்வில் - ஓபர்வில் பகுதியில் உள்ள பண்ணையில் தன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, மேய்ச்சல் போதும் என்று கருதிய இவர் தனது மூன்று பசுக்களையும், இரண்டு காளைகளையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியே வரச் செய்தார். அப்போது ஒரு காளைமாடு மட்டும் அவரது அழைப்புக்கு இணங்காமல் மேலும் மேலும் மேய்ச்சலுக்குச் சென்றது. விவசாயி அதனை மறுபக்கமாகசென்று அதட்டினார்....

ரசிகர்களை ஏமாற்றிய ஐஸ்வர்யா ராய்

21.08.2012. ரசிகர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஐஸ்வர்யா ராய் எஸ்கேப் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று கொச்சி வந்தார். அவர் வருவது பற்றி தகவல் பரவியதால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. கமராவும் கையுமாக ஆவலாக மணிக்கணக்கில் காத்திருந்தனர். பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், கார் பார்க்கிங்கில் இருந்த டிரைவர்களும் ஐஸ்வர்யாவை காண காத்திருந்தனர். பொலிசார் சிலரும்...

சென்னையை பசுமையாக பார்க்க ஆசை: நயன்தாரா

 21-08-2012. சென்னை உள்ள ரோடுகள் மழைக் காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். கடந்த 2005ம் ஆண்டில் ஐயா, சந்திரமுகி, கஜினி படங்கள் மூலம் பிரபலமாகி இங்கேயே தங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் அவருக்கு நிரந்தரமாக ரூம் இருந்ததால் அங்கிருந்தே சென்னையை ஒட்டி நடந்த படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். தெலுங்கில் படங்களில் பரபரப்பான...

ஜப்பானில் முட்டைகோஸ் சாப்பிட்ட 7 பேர் மரணம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஜப்பானில் முட்டைகோஸ் தொக்கு சாப்பிட்ட ஏழு பேர் மரணமடைந்துள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சீனாவில் முட்டைகோசால் செய்யப்படும் தொக்கு, ஜப்பானில் மிகவும் பிரபலமாகி இருந்தது. ஜப்பானில் உள்ள முதியவர்கள், இந்த முட்டைகோஸ் தொக்கை விரும்பி சாப்பிடுவார்கள். இந்நிலையில் ஹொகைடோ மாகாணத்தில், கெட்டுபோன முட்டைகோஸ் தொக்கை சாப்பிட்ட ஏழு பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில்...

சிலாபத்தில் தமிழ் இளைஞர்கள் 10 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சிலாபம் நகரில் தங்கியிருந்த 10 தமிழ் இளைஞர்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமான முறையில் பயணிக்க தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டு...

ஆனையிறவிலும் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு! 10 ஏக்கரில் கடற்படை முகாம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர். ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்று முன்நாள் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து...

யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய இரண்டாம் நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடமே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தெடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில், மீளக்குடியமர்வுகள்...

சீனா தொடர்பில் இந்தியா, இலங்கைக்கு நேரடி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை...