21.08.2012.
| நினைத்தாலே இனிக்கும் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள படம் ஹரிதாஸ். |
|
இப்படத்தில் நாயகனாக கிஷோரும், நாயகியாக சினேகாவும் நடித்துள்ளனர். மேலும், என் கேரியரில், ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார். படம் குறித்து இயக்குனர் குமரவேலன் கூறுகையில், இந்த படத்தில் சினேகாவுக்கு, ஆசிரியை வேடம். அது மிக வலுவான கதாபாத்திரம். இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும். குறிப்பாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார் |








